மனநல காப்பகத்தில் -78 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!!
கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில், சிறுவர் – சிறுமியர் உட்பட 78 பேருக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை கீழ்ப்பாக்கத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ், மனவளர்ச்சி குன்றியவர்களுக்கான அரசு உதவிபெறும் காப்பகம் மற்றும் சிறப்பு பள்ளி இயங்கி வருகிறது.இந்த காப்பகத்தில், 168 மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகள் தங்கியுள்ளனர்.
இந்த செய்தியையும் படிங்க….
ஆஸ்துமா பிரச்சனைகளுக்கு இயற்கை வைத்திய முறை.! உணவுக் கட்டுப்பாடு.!
சமீபத்தில், காப்பகத்தில் தங்கியிருந்த சிறுவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டதாக கூறப்படுகிறது.இதைத் தொடர்ந்து, காப்பகத்தில் உள்ள அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், 14-18 வயதுடைய 19 சிறுவர்கள், எட்டு சிறுமியர் உட்பட 78 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, தொற்று உறுதி செய்யப்பட்ட 78 பேரும், காப்பகத்தில் வேறொரு இடத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான வசதியை மாநகராட்சி செய்துள்ளது.