புதிதாக வழங்கப்பட்டுள்ள -ரேஷன் கார்டுகளுக்கு(Family Card) ரூ.2,000..!! - Tamil Crowd (Health Care)

புதிதாக வழங்கப்பட்டுள்ள -ரேஷன் கார்டுகளுக்கு(Family Card) ரூ.2,000..!!

 புதிதாக வழங்கப்பட்டுள்ள -ரேஷன் கார்டுகளுக்கு  (Family Card) ரூ.2,000..!!

 தற்போது நடைமுறைக்கு வந்துள்ள 2,14,950 புதிய அரிசி குடும்ப அட்டைதாரார்களுக்கும் ரூ.2,000  நிவாரண தொகை வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.  

இந்த செய்தியையும் படிங்க….

கொரோனாவிலிருந்து -எப்போது விடிவுகாலம் பிறக்கும்..??

தமிழக அரசு  வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழ்நாடு சட்டமன்ற பேரவை தேர்தல் அறிக்கையில், கொரோனா தொற்றால் செயல்படுத்தப்பட்டுள்ள கட்டுப்பாடுகளால் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் துன்பங்களை போக்குவதற்கு, அரிசி குடும்ப அட்டை  Family Card வைத்துள்ள  குடும்பங்கள் அனைத்திற்கும் ஆறுதல் அளிக்கும் வகையில் கலைஞரின் பிறந்த நாள் முதல் ரூ.4000 வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்திருந்தார்.

இந்நிலையில், கொரோனா நோய் தொற்றின் காரணமாக பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்களை குறைக்கும் வகையிலும், பெருந்தொற்று நேரத்தில் பொதுமக்களின் வாழ்வாதாரத்திற்கு உதவும் வகையிலும், ரூ.4153.39 கோடி செலவில், மே  2021 மாதத்தில்  2,07,66,950 எண்ணிக்கையிலான அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.2000 நிவாரண தொகையினை முதல் தவணையாக வழங்க ஏற்கெனவே முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.  

இந்த செய்தியையும் படிங்க….

 மாற்றுத்திறனாளிகளின் குடும்பங்களுக்கு கூடுதலாக கரோனா நிவாரணம்:வழங்கக் கோரிக்கை..!!

இதனைத் தொடர்ந்து, தற்போது நடைமுறைக்கு வந்துள்ள 2,14,950 புதிய அரிசி குடும்ப அட்டைகளை  Family Card பெற்றுள்ள குடும்ப அட்டைதாரர்களின் வாழ்வாதாரத்திற்கும் மேற்கூறிய உதவியை வழங்கிடும் வகையில், ரூ.42.99 கோடி செலவில் மே 2021  மாதத்தில் ரூ.2,000 நிவாரண தொகையினை முதல் தவணையாக வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Comment