குழந்தைகளிடம் வீரியம் காட்டும் - கொரோனா..!! - Tamil Crowd (Health Care)

குழந்தைகளிடம் வீரியம் காட்டும் – கொரோனா..!!

 குழந்தைகளிடம் வீரியம் காட்டும் – கொரோனா..!!

 கர்நாடக மாநிலத்தில் கடந்த 2 மாதங்களில் மட்டும் 9 வயதுக்குட்பட்ட 40 ஆயிரம் குழந்தைகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக அந்த மாநில சுகாதாரத்துறை கூறியுள்ளது. கொரோனா 2ம் அலையில் கடந்த மார்ச் 18 முதல் மே 18ம் தேதி வரையிலான காலகட்டத்தில் கர்நாடகத்தில் பெருமளவு குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 மாதங்களில் 9 வயதுக்கு உட்பட்ட குழநதைகளின் தொற்று பாதிப்பு விகிதம்  143 சதவீதமாக உள்ளது. 

         இந்த செய்தியையும் படிங்க….

கருப்பு பூஞ்சை நோய் என்றால் என்ன..?? அறிகுறிகள் என்ன..??  

அதாவது 40 ஆயிரம் பேர் ஆவர். மறுபுறத்தில் 10 வயதில் இருந்து 19 வயதுக்கு உட்பட்ட சிறுவர் மற்றும் விடலை பருவத்தினருக்கு ஏற்படும் தொற்று விகிதம், 160 சதவீதமாக பதிவாகியுள்ளது. அதாவது 1 லட்சத்து 5 ஆயிரத்து 44 சிறுவர் மற்றும் விடலை பருவத்தினர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகத்தில் அதிக எண்ணிக்கையில் குழந்தைகள் பாதிக்கப்பட்டாலும் உயிரிழப்புகள் அதிகமாக இல்லை என்பது ஆறுதல் அளிக்கும் விதமாக உள்ளது. 

குழந்தைகளுக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதற்கு, அவர்களது குடும்ப உறுப்பினர்களே காரணம் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனிடையே கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல கர்நாடக மாநிலம் கலபுரகியில், ஆட்டோ ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டிருக்கிறது. 

இந்த செய்தியையும் படிங்க….

 ஆஸ்துமா,. ஒவ்வாமை பிரச்சனை உள்ளவர்கள் -கோவிட் தடுப்பூசி எடுத்துக் கொள்ளலாமா..?? 

குறுகலான தெருக்கள் வழியாக விரைவாக மருத்துவமனையை சென்றடைய இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

Leave a Comment