10-ம் - வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து மாணவர்களின் வாழ்க்கையை அழிக்க வேண்டாம் - மும்பை உயர் நீதிமன்றம் ..!! - Tamil Crowd (Health Care)

10-ம் – வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து மாணவர்களின் வாழ்க்கையை அழிக்க வேண்டாம் – மும்பை உயர் நீதிமன்றம் ..!!

 SSC (10-ம்) – வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து மாணவர்களின் வாழ்க்கையை அழிக்க வேண்டாம் – மும்பை உயர் நீதிமன்றம் ..!!

மகாராஷ்டிரா அரசு கொரோனா பரவலைக் கருத்தில்கொண்டு எஸ்.எஸ்.சி.(SSC) எனப்படும் 10-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வை ரத்து செய்ய முடிவு செய்துள்ளது. கொரோனா எப்போது முடிவுக்கு வரும் என்று தெரியாமல் இருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக அரசு தெரிவித்தது. 

இந்த செய்தியையும் படிங்க….

 கல்வித்துறையில் ஊழல்- தடுக்கும் புதிய சீர்திருத்த முறைக்கு வரவேற்பு..!!  

Plus Two (12-ம்) வகுப்புக்கு பொதுத்தேர்வு மே இறுதியில் அல்லது ஜூன் முதல் வாரத்தில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அது தொடர்பாக இதுவரை எந்த அறிவிப்பும் இல்லாமல் இருக்கிறது. இதனால் 12-ம் (Plus Two) வகுப்பு பொதுத்தேர்வு நடக்குமா நடக்காதா என்ற குழப்பத்தில் மாணவர்கள் இருக்கின்றனர். அரசு SSC 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்வதை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி ஷாருக் காதாவாலா தலைமையிலான டிவிஷன் பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது கருத்து தெரிவித்த நீதிபதிகள்,” (SSC) 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து ஒட்டுமொத்த கல்வி சிஸ்டத்தையும் கேலிக் கூத்தாக்க வேண்டாம். 

கொரோனா பரவலைக் காரணம் காட்டி மாணவர்களின் வாழ்க்கையை அழிக்க வேண்டாம்” என்று தெரிவித்தனர். மாநில அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரியா பூஷண்,  (SSC)10-ம் வகுப்பு மாணவர்களுக்கு எவ்வாறு மதிப்பெண் வழங்கலாம் என்பது குறித்து மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலின் பரிந்துரைக்காகக் காத்திருப்பதாகக் கூறினார்.

இதைக் கேட்ட நீதிபதிகள், “10-ம்(SSC) வகுப்பு மாணவர்களை தேர்வு எழுதாமல் தேர்ச்சி பெற்றதாக அறிவித்தால், நாட்டில் கல்வி முறையை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும். 10-ம் (SSC) வகுப்பு தேர்வு பள்ளி வாழ்க்கையில் மிகவும் முக்கியமான தேர்வு. தேர்வு எழுதாமல் தேர்ச்சிபெற்றதாக அறிவித்து, நமது கல்வி முறையை கேலிக்குரியதாக ஆக்குகிறீர்களா? 12-ம்(Plus Two) வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்தும்போது கொரோனா பரவலைக் காரணம் காட்டாதீர்கள். கொரோனா பரவல் இப்போது குறைந்துவருகிறது. எனவே கொரோனா பரவலைக் காரணம் காட்டி நமது மாணவர்களின் எதிர்காலத்தை அழிக்க வேண்டாம்.

12-ம் (Plus Two)வகுப்பு தேர்வை மட்டும் ஏன் நடத்துகிறீர்கள். ஏன் இந்தப் பாரபட்சம். இது போன்ற முடிவுகளை யார் எடுத்தது?” என்று சரமாரியாகக் கேட்டனர். மேலும் “நீங்கள் கல்வி முறையை அழிக்கிறீர்கள். வேறு ஏதாவது மாநிலம் 10-ம் (SSC) வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்திருக்கிறதா?” என்று நீதிபதிகள் கேட்டனர். உடனே தமிழ்நாட்டில்,10-ம் (SSC) தேர்வு ரத்து செய்யப்பட்டிருப்பதாக அரசு வழக்கறிஞர் பிரியா தெரிவித்தார். 

உடனே, “நீங்கள் மற்ற மாநிலங்களைப் பின்பற்றுவேண்டுமா அல்லது உங்களை மற்ற மாநிலங்கள் பின்பற்றவேண்டுமா? 12-ம் ( Plus Two ) வகுப்புக்கு ஏன் இது போன்ற ஒரு முடிவை எடுக்கவில்லை என்று எங்களுக்குப் புரியவில்லை” என்று நீதிபதிகள் தெரிவித்தனர். 

இந்த செய்தியையும் படிங்க….

தமிழக பள்ளிக்கல்வி துறையில் நடந்துள்ள விதிமீறல்கள் -விசாரணை நடத்த உத்தரவு..!!  

இதில் இறுதி முடிவெடுக்க உயர் நீதிமன்றம் கால அவகாசம் கொடுக்க வேண்டுமென்று அரசு வழக்கறிஞர் கேட்டுக்கொண்டார். இதையடுத்து அரசு புதிய அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர். ஏற்கெனவே சி.பி.எஸ்.சி(CBSC) போர்டு 10-ம்(SSC) பொதுத்தேர்வை ரத்து செய்திருக்கிறது. மேலும் 12-ம் (Plus Two)வகுப்பு தேர்வையும் ரத்து செய்யலாமா என்பது குறித்துப் பரிசீலித்துவருகிறது.

Leave a Comment