சமூக ஊடகங்களில் ‘இந்திய திரிபு’ (Indian variant) என குறிப்பிடும் பதிவுகளை நீக்க வேண்டும்: மத்திய அரசு..!!
‘இந்திய மாறுபாடு’
COVID-19 தொடர்பான தவறான தகவல்களைத் தடுக்கும் நடவடிக்கையாக, கொரோனா வைரஸின் ‘இந்திய மாறுபாடு’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தும் அல்லது குறிப்பிடும் எந்தவொரு உள்ளடக்கத்தையும் உடனடியாக தங்கள் தளத்திலிருந்து நீக்குமாறு சமூக ஊடக நிறுவனங்களை மத்திய அரசு கேட்டுள்ளது.
இந்த செய்தியையும் படிங்க…
CORONA -19: மூன்றாம் அலை- குழந்தையை காக்கும் முன் எச்சரிக்கை முறைகள் என்னென்ன..??
உலக சுகாதார அமைப்பு (WHO)
உலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய திரிபு (Indian variant) என்ற வார்த்தையை எந்த ஒரு அறிக்கையிலும் பிரயோகிக்கவில்லை என்றும், கொரோனா வைரஸின் B.1.617 திரிபுடன் அதனை தொடர்புபடுத்தவில்லை என்று தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் அனைத்து சமூக ஊடக தளங்களுக்கும் கடிதம் எழுதியுள்ளது.
கொரோனா வைரஸ் திரிபு B.1.617
கொரோனா வைரஸ் திரிபு B.1.617 என்ற வகை வேகமாக பரவுவது, உலக அளவில் கவலையை ஏற்படுத்தும் விஷயமாக உள்ளது என WHO தனது அறிக்கையில் கூறியிருந்தது.
“இது முற்றிலும் தவறானது. உலக சுகாதார அமைப்பு (WHO) இந்திய கோவிட் -19 திரிபு என பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. WHO அதன் எந்தவொரு அறிக்கையிலும் கொரோனா வைரஸின் B.1.617 திரிபை ‘Indian variant’ என்ற வார்த்தையுடன் தொடர்புபடுத்தவில்லை. இந்த வார்த்தை பல சமயங்களில் தவறாகப் பயன்படுத்தப்பட்டு தேசத்தின் மரியாதையை சர்வதேச அளவில் களங்கப்படுத்துகிறது, ” என இந்திய அரசு கடிதம் எழுதியுள்ளதாக ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
இது தொடர்பாக தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கொரோனா வைரஸின் “இந்திய திரிபு” (Indian variant) பல நாடுகளில் வேகமாக பரவி வருவதைக் சமூக ஊடகங்களில் ஒரு தவறான தகவல் பரப்பப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக, ஏற்கனவே சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம், மே 12ம் தேதி அன்று ஒரு செய்திக்குறிப்பு மூலம் தெளிவுபடுத்தியுள்ளது.
சமூக ஊடக தளங்களிடம் “உங்கள் தளங்களில் இருந்து கொரோனா வைரஸின் “இந்திய திரிபு” (Indian variant) என பெயர்கள் கொண்ட அல்லது அவ்வாறு பொருள் படும் வகையில் உள்ள பதிவுகள் மற்றும் அனைத்து உள்ளடக்கங்களையும் உடனடியாக அகற்றுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது” என்று அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
இந்த செய்தியையும் படிங்க…
கருப்பு பூஞ்சை அறிகுறிகள் என்னென்ன..?? சிகிச்சை முறை என்ன..??
மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
முன்னதாக, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் சமூக ஊடக தளங்களில் கொரோனா வைரஸ் தொடர்பான தவறான செய்திகள் / தவறான தகவல்களைத் தடுப்பது தொடர்பான அறிவுறுத்தல்களை வெளியிட்டது.