கர்நாடகாவில் ஜூன் 7 வரை ஊரடங்கு நீட்டிப்பு – முதல்வர் எடியூரப்பா..!!
கர்நாடகாவில் கரோனா வைரஸ் தொற்று தீவிரமடைந்துள்ளதால் வரும் ஜூன் 7-ம் தேதி வரை ஊரடங்கை நீட்டிப்பதாக முதல்வர் எடியூரப்பா அறிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் கடந்த ஏப்ரலில் கரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்து ஒரே நாளில் 50 ஆயிரம் பேருக்கு தொற்று ஏற்பட்டதால் கடந்த ஏப்ரல் 27-ம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. முதலில் 14 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் தொற்று பரவல் குறையாததால், மீண்டும் மே 24-ம் தேதிவரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது.
இந்த செய்தியையும் படிங்க…
கருப்பு பூஞ்சை அறிகுறிகள் என்னென்ன..?? சிகிச்சை முறை என்ன..??
இந்நிலையில் நேற்று எடியூரப்பா, ‘கர்நாடகாவில் இருமுறை ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட போதும் கரோனாவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. தொற்றை கட்டுப் படுத்த வேறு வழி இல்லாததால் மீண்டும் ஊரடங்கை அமல்படுத்த வேண்டிய நிலைக்கு அரசு தள்ளப் பட்டுள்ளது. அதன்படி வரும் ஜூன் 7ம் தேதிவரை மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. கருப்பு பூஞ்சை தொற்று குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை. அந்த நோயால் பாதிக்கப்பட்டோருக்கு இலவச சிகிச்சை அளிக்கப்படும்” என தெரிவித்தார்.