மருத்துவ(MBBS) படிப்பு – மாற்றம் இல்லை:உயர்கல்வி அமைச்சர் ..!!
மத்திய கல்வித்துறை அமைச்சர் தலைமையில், மாநிலங்களின் கல்வி அமைச்சர் உடனான ஆலோசனை கூட்டம்:
‘NEET கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை; பழைய நிலையே தொடரும்’ Plus Two தேர்வு தொடர்பாக, மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தலைமையில், மாநிலங்களின் அமைச்சர்கள் உடனான ஆலோசனை கூட்டம், வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக நடந்தது.
இந்த செய்தியையும் படிங்க…
ஆன்லைன் வகுப்புகள் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள்- ஆசிரியர்களுக்கு வகுக்கப்படாதது ஏன்..??
கூட்டம் முடிந்த பின், அமைச்சர் பொன்முடி அளித்த பேட்டி:
CBSC., Plus Two தேர்வு குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. அதேநேரம், Plus Two தேர்வு முடிந்த பின், JEE., – ICAR, போன்ற தேர்வுகள் மற்றும் NEET தேர்வை நடத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
மத்திய இன்ஜினியரிங் கல்லுாரிகளின் சேர்க்கைக்கு, JEE., என்ற நுழைவு தேர்வும்; மத்திய வேளாண் கல்லுாரிகளுக்கான சேர்க்கைக்கு,ICAR., என்ற நுழைவு தேர்வும் நடத்தப்படுகிறது.ஆனால், மருத்துவ படிப்புக்கானNEET தேர்வு மட்டும், மத்திய மற்றும் மாநில அளவிலான மருத்துவக் கல்லுாரிகளுக்கும் நடத்தப்படுகிறது. இதை மாற்றும்படி கோரினோம். நாடு முழுவதும் ஒரே மாதிரியாக நடத்தப்படும் NEET தேர்வு வேண்டாம் என்பது தான், எங்களின் நிலைப்பாடு.
அதை, மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளோம். வேண்டுமெனில், மாநில அளவில், NEET’ தேர்வை நடத்திக் கொள்கிறோம் என்று கூறியுள்ளோம்.மத்திய அரசின் கீழ் உள்ள மருத்துவ கல்லுாரிகளுக்கு வேண்டுமானால், NEET தேர்வை நடத்திக் கொள்ளுங்கள். மாநில கல்லுாரிகளுக்கு வேண்டாம் என்ற, கோரிக்கையை முன்வைத்து உள்ளோம். இவ்வாறு பொன்முடி கூறினார்.
NEET தேர்வே வேண்டாம் என, தி.மு.க., நிலைப்பாடு கொண்டிருந்த நிலையில், ‘மாநில அளவில் தேர்வு நடத்தப்படும்’ என, அமைச்சர் கூறியது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
மாற்றம் இல்லை
தமிழக அரசு இரவு வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மத்திய அரசு நடத்திய, கல்வி அமைச்சர்கள் உடனான கூட்டத்தில், உயர்கல்வி அமைச்சர் பொன்முடி பேசிய போது, ‘தமிழகத்திற்கு NEET தேர்வு கூடாது. வழக்கம் போல Plus Two மதிப்பெண் அடிப்படையில், மாநில மருத்துவ கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கை நடக்க வேண்டும்’ என, தெரிவித்தார்.
இந்த கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டு, தமிழக அரசு தனியே NEET தேர்வை மாநில அளவில் நடத்த இருப்பதாக, ஊடகங்களில் வந்த செய்தி முற்றிலும் தவறானது. Plus Two மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே, மருத்துவ படிப்புக்கு மாணவர் சேர்க்கை நடக்க வேண்டும் என்ற, தமிழக அரசின் கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.’
Plus Two தேர்வு கட்டாயம்’பள்ளி கல்வி அமைச்சர் மகேஷ் பேட்டி:
CBSE,யின் Plus Two தேர்வை எப்போது நடத்தலாம் என, ஆலோசிக்கப்பட்டது. ஒவ்வொரு மாநிலமும், ஒவ்வொரு மாதிரியான கருத்துகளை தெரிவித்தன.
அதன் அடிப்படையில், தமிழகத்தில் கொரோனா தொற்று எப்போது குறையுமோ, அப்போது தேர்வு நடத்த முடிவு செய்வோம் என கூறியுள்ளோம். இது குறித்து, நாளைக்குள் விரிவான கருத்துகளை, மத்திய அரசுக்கு, இ- மெயிலில் (E-Mail) அனுப்ப உள்ளோம்.
இந்த செய்தியையும் படிங்க…
Plus Two வுக்கு தேர்வை நடத்தியே ஆக வேண்டும் என்பதே, பெரும்பாலான மாநிலங்களின் கருத்து. ‘All Pass’ என்று அறிவித்தால், அந்த மாணவர்களின் மதிப்பெண், சில இடங்களில் ஏற்கப்படாவிட்டால், அவர்கள் உயர் கல்வியில் சேர்வதில் பிரச்னை ஏற்படும். எனவே, Plus Two தேர்வை கட்டாயம் நடத்த வேண்டும் என்பதே தமிழக அரசின் கருத்து. இவ்வாறு அவர் கூறினார்.