தேவைப்பட்டால் ஊரடங்கு நீட்டிக்கப்படும் : முதல்வர் ஸ்டாலின்..!! - Tamil Crowd (Health Care)

தேவைப்பட்டால் ஊரடங்கு நீட்டிக்கப்படும் : முதல்வர் ஸ்டாலின்..!!

 தேவைப்பட்டால் ஊரடங்கு நீட்டிக்கப்படும்  : முதல்வர் ஸ்டாலின்..!!

முழு ஊரடங்கு:

முழு ஊரடங்கு காரணமாக, பலன் கிடைக்க துவங்கி உள்ளதாகவும், தேவைப்பட்டால், முழு ஊரடங்கு நீட்டிக்கப்படும் எனவும் முதல்வர் ஸ்டாலின் கூறி உள்ளார்.

இந்த செய்தியையும் படிங்க…

60 வயது வரை முழு சம்பளம், காப்பீடு, கல்வி – டாடா நிறுவனம் அறிவிப்பு..!!  

திருவள்ளூர் மாவட்டம் நேமம் ஆரம்ப சுகாதார நிலையத்தை ஆய்வு செய்த பின்னர் நிருபர்களிடம் ஸ்டாலின் கூறியதாவது: 

முழு ஊரடங்கால் பலன் கிடைக்க துவங்கி உள்ளதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இன்னும் 2 அல்லது 3 நாட்களுக்குள் முழு பலனை தரும் என்று நம்பிக்கை உள்ளது. ஊரடங்கை மதித்து மக்கள் வீடுகளில் இருக்க வேண்டும்.தமிழகத்தில் தினமும் 78 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு வந்தது. நேற்று இதுவரை இல்லாத அளவாக 2.24 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. 

தடுப்பூசி:

கடந்த இரண்டு வாரங்களில் தடுப்பூசி வீணாவது 6-ல் இருந்து ஒரு சதவீதமாக குறைந்து போர்க்கால அடிப்படையில் தடுப்பூசி போடுவதற்கு நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளேன். தடுப்பூசி இயக்கம், மக்கள் இயக்கமாக மாற்றப்படும். 

பொது மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும் என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்தி, வற்புறுத்தி கெஞ்சி கேட்டு கொள்கிறேன்.வாய்ப்பு உள்ளோர் தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும். மக்களை காப்பதில் தடுப்பூசியின் பங்கு அதிகம் உள்ளது. மத்திய அரசு கூடுதலாக தடுப்பூசி வழங்க வேண்டும்.

தமிழக அரசு நடவடிக்கை:

44 வயதுக்கு உட்பட்டோருக்கு தடுப்பூசி போட 3.14 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளது. தமிழகத்தில் தடுப்பூசி தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. செங்கல்பட்டு ஆலையில் தடுப்பூசி தயாரிக்கும் பணியை துவங்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தடுப்பூசிக்காக சர்வதேச அளவில் டெண்டர் விடப்பட்டு உள்ளது.தமிழகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லாத சூழ்நிலையை ஏற்படுத்தி உள்ளோம்.

இந்த செய்தியையும் படிங்க…

ஆன்லைன் வகுப்புகள்  தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள்- ஆசிரியர்களுக்கு  வகுக்கப்படாதது ஏன்..?? 

முழு ஊரடங்கை நீட்டிப்பது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும்:

கோவையில், கொரோனா பரவலை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முழு ஊரடங்கு காரணமாக, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் படிப்படியாக பாதிப்பு குறைந்து வருகிறது. கொரோனா பாதிப்பை பொறுத்துதேவைப்பட்டால், முழு ஊரடங்கை நீட்டிப்பது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment