சுண்டைக்காய் - மருத்துவ பயன்கள் என்னென்ன..?? - Tamil Crowd (Health Care)

சுண்டைக்காய் – மருத்துவ பயன்கள் என்னென்ன..??

 சுண்டைக்காய்  – மருத்துவ பயன்கள் என்னென்ன..??

உடல் சோர்வினை நீக்க:

உடல் சோர்வினை நீக்கும் 

 இரத்தம் சுத்தமடைய:

சுண்டைக்காயில் அதிக அளவில் புரதம்(Protein), கால்சியம்(Calcium) மற்றும் இரும்புச்சத்து(Iron) நிறைந்துள்ளது. இதை வாரம் இருமுறை சமைத்து சாப்பிட்டால் இரத்தம் சுத்தமடையும்.

எலும்புகள் பலம்பெற:

பெண்கள் பச்சை சுண்டைக்காயை அடிக்கடி எடுத்துக்கொள்வதன் மூலம் எலும்புகள் பலம்பெறும். 

தாய்ப்பால் சுரக்க:

சுண்டைக்காய் தாய்ப்பால் சுரப்பை அதிகரித்து, செரிமான சக்தியைத் தூண்டி, உடலின் நச்சுகளை வெளியேற்றும் சக்தி கொண்டது.

மார்புச்சளி சரிசெய்ய:

முற்றிய சுண்டைக்காயை நசுக்கி மோரில் போட்டு ஊறவைத்து, வெயிலில் காயவைத்து எடுத்துக் கொள்ளவும். இதை தினமும் எண்ணெயில் வறுத்து சாப்பிடலாம் அல்லது வற்றல் குழம்பாக்கி சாப்பிடலாம். இது மார்புச்சளியை சரிசெய்யும்.

இந்த செய்தியையும் படிங்க…

 இருமலை கட்டுக்குள் கொண்டு வர உதவும் – இயற்கை மருத்துவ குறிப்புகள் என்னென்ன..!!

உடல் சோர்வு நீங்க:

 சுண்டைக்காய் வற்றலை நெய்யில் வறுத்து பொடியாக்கி சாதத்துடன் சேர்த்து பிசைந்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோயினால் உண்டாகும் கை கால் நடுக்கம், மயக்கம், உடல் சோர்வு, வயிற்றுப்பொருமல் ஆகியவை நீங்கும்.

மலக்குடல் கிருமிகள் நீங்க:

சுண்டைக்காய் வற்றல், கறிவேம்பு, மிளகு, சீரகம், வெந்தயம் ஆகியவற்றை சம அளவாக எடுத்து பொன்னிறமாக வறுத்து சிறிது உப்பு சேர்த்து ஒரு சிட்டிகையளவு உணவுடன் மூன்று வேளை சாப்பிட பசி மந்தம், சுவையின்மை, மலக்குடல் கிருமிகள் மற்றும் மூலம் குணமாகும்.

வயிற்றின் உட்புறச் சுவர்கள் பலமடைய:

சுண்டைக்காயை உலர்த்திப் பொடியாக்கி சூரணம் செய்து, நீரில் கரைத்து சாப்பிட்டு வந்தால் ஆசனவாய் அரிப்பு நீங்கும். மலக்கிருமிகள் மற்றும் மூலக்கிருமிகள் அகலும். மேலும் வயிற்றுப்புண் ஆறும். வயிற்றின் உட்புறச் சுவர்கள் பலமடையும்.

இருமல் சரியாக:

சுண்டைக்காயை இரண்டாக நறுக்கி அதனுடன் பூண்டு, சின்ன வெங்காயம், மிளகு, சீரகம், கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை சேர்த்து நன்கு கொதிக்க வைத்து சூப் செய்து அருந்தி வந்தால் கபக்கட்டு, இருமல், மூலச்சூடு, மூலக்கடுப்பு, மூலத்தில் இரத்தம் வெளியேறுதல் போன்ற பிரச்சனைகள் சரியாகும்.

அஜீரணக் கோளாறுகளை நீக்க:

நாட்டுச் சுண்டைக்காயை பச்சையாக சமைத்து உண்பதன் மூலம் நுண்புழுவால் உண்டான நோய்களை குணப்படுத்தும் மற்றும் அஜீரணக் கோளாறுகளை நீக்கும். 

இந்த செய்தியையும் படிங்க…

இரத்த வெள்ளையணுக்களை(WBC) அதிகரிக்க- எந்தெந்த உணவுகளை சாப்பிடலாம் .!!

சுவாசம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை சரிசெய்ய:

சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், அடிக்கடி சுண்டைக்காயை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் சுவாசம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை சரிசெய்யலாம்.

Leave a Comment