வேலைவாய்ப்பு அலுவலகத்தில் புதுப்பிக்க தவறியவர்களுக்கு-தமிழக அரசு அறிவிப்பு..!! - Tamil Crowd (Health Care)

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் புதுப்பிக்க தவறியவர்களுக்கு-தமிழக அரசு அறிவிப்பு..!!

 வேலைவாய்ப்பு அலுவலகத்தில் புதுப்பிக்க தவறியவர்களுக்கு-தமிழக அரசு அறிவிப்பு..!!

தமிழகம் முழுவதும் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 2017, 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் பதிவினை புதுப்பிக்க தவறிய அனைவருக்கும் சிறப்பு சலுகை ஒன்றை அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இந்த செய்தியையும் படிங்க…

 சோம்பு(Fennel Seeds), பெருஞ்சீரகம்- பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள்..!!  

 தமிழகத்தில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகங்களில் கடந்த 2017ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் 2019ஆம் ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதி வரை வேலைவாய்ப்பு அலுவலகங்களில் புதுப்பிக்க தவறிய அனைவருக்கும் சில நிபந்தனைகளுடன் சலுகைகள் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் 2017, 2018, 2019 ஆம் ஆண்டுகளில் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவை புதுப்பிக்க தவறியவர்களுக்கு அவகாசம் அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இணையதளம் சம்பந்தப்பட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்திற்கு பதிவு அஞ்சலில் விண்ணப்பம் தந்து புதுப்பிக்கலாம். பதிவு அஞ்சல் https://tnvelaivaippu.gov.in என்ற இணையதள முகவரியில் ஆகஸ்ட் 27 வரை புதுப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் மூன்று மாதங்களுக்குப் பிறகு கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டு அதுமட்டுமல்லாமல் 2017 ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதிக்கு முன்பு புதுப்பிக்க தவறியவர்களின் கோரிக்கைகள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்று தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

Leave a Comment