அரசு ஊழியர் ஓய்வு வயதை பழையபடி குறைக்கப்படுமா ..!!
‘அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை பழையபடி மாற்ற வேண்டும்’ என, தமிழ்நாடு வேலையில்லா பட்டதாரிகள் நலச்சங்கம், அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. சங்கத்தின் தலைவர் சோமசுந்தரம், செயலர் முகேஷ் ஆகியோர்,
தலைமை செயலர் இறையன்புவுக்கு அனுப்பியுள்ள மனு:
வேலைவாய்ப்பற்ற லட்சக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலம் குறித்து கவலைப்படாமல், அ.தி.மு.க., ஆட்சியில், கடைசி நேரத்தில், அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 58ல் இருந்து 59; பின் 60 என உயர்த்தி ஆணை வெளியிடப்பட்டது. இதனால், அரசு வேலையை எதிர்பார்த்திருக்கும் லட்சக்கணக்கான இளைஞர்களின் கனவு தகர்ந்துள்ளது.
இந்த செய்தியையும் படிங்க…
தூதுவளை (THUTHUVALAI) -இலை, காய், ஆகியவற்றில் என்னென்ன நன்மைகள் இருக்கிறது : பார்க்கலாமா..??
அப்போது, அரசுக்கு கடும் நிதிச்சுமை ஏற்படும். ஓய்வு வயது நீட்டிக்கப்பட்டதால் இரண்டு ஆண்டுகளில் அவர்கள் பெறும் மாத சம்பளத்தை கணக்கு போட்டு பார்த்தால், அவர்களுக்கு கொடுக்கப்படும் ஓய்வூதிய பலன்களை விட அதிகமாகவே இருக்கும்.எனவே, தாங்கள் அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை, பழையபடி 58 ஆக குறைக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.