இந்தியாவில் COVID- அடுத்த அலையை கணிக்க இயலாது-WHO..!!
இந்தியாவில் COVID அடுத்த அலையை கணிக்க இயலாது என உலக சுகாதார அமைப்பு WHO தெரிவித்துள்ளது.இந்தியாவில் COVID-19 வைரசின் முதல் அலையை விட 2வது அலை அதி தீவிரமாக பரவியது. இதில் ஒரு நாளைக்கு 4 லட்சத்திற்கு மேற்பட்டவர்கள் கூட பாதிக்கப்பட்டு வந்தனர். தற்போது தினசரி கோவிட் பாதிப்புகள் படிப்படியாக குறைந்து 1.65 லட்சமாக பதிவாகியுள்ளது.
இந்த செய்தியையும் படிங்க…
சளி, இருமல், ஆஸ்துமா, தலைவலி, மூக்கடைப்பு தொல்லை குணமாக-கருஞ்சீரகம் (Karunjeeragam nanmaikal)..!
இந்தியாவில் 2வது அலையில் இளைஞர்களுக்கு அதிகளவு பாதிப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையே 3வது அலை இதைவிட தீவிரமாகவும் இருக்கும் எனவும், குழந்தைகளை அதிகளவு தாக்கும் எனவும் மருத்துவர்கள் கூறிவந்தனர்.
COVID-19:அடுத்த அலையை கணிக்க இயலாது:
இந்நிலையில் அடுத்த அலையை கணிக்க இயலாது என உலக சுகாதார அமைப்பு WHO தெரிவித்துள்ளது.
இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசிய பிராந்திய இயக்குனர் டாக்டர் பூனம் கேத்ரபால் சிங் கூறியதாவது:
இந்தியாவில் covid -19 virus வேகமாக பரவி, சுகாதார சேவைகளுக்கு பெரும் சுமையை ஏற்படுத்தியுள்ளது. தற்போது நாட்டின் சில பகுதிகளில் COVID தொற்று குறைந்து வருவதை பார்க்கிறோம். ஆனாலும், சூழ்நிலை தொடர்ந்து சவாலாகவே உள்ளது. எனவே, நாம் முதலில் கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி COVID தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டும். COVID அடுத்த அலையை நாம் கணிக்க முடியாது, ஆனால் அதைத் தடுக்க முடியும். அதை நாம் கட்டாயம் செய்வோம். இவ்வாறு அவர் கூறினார்.