பாலியல் தொல்லை குற்றங்களில் ஈடுபடும் ஆசிரியர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை: குழந்தைகள் உரிமை அமைப்பு வலியுறுத்தல்..!!
தமிழ்நாடு-புதுச்சேரி குழந்தைகள் நலம் மற்றும் உரிமைக்கான கூட்டமைப்பின் மாநில தலைவர் ஜி.சிவலிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னையை சேர்ந்த பத்மா சேஷாத்ரி பள்ளி மாணவிகள் அளித்த ஆசிரியர்கள் மீதான பாலியல் புகார் குறித்து தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுத்து ஆசிரியரை கைது செய்திருப்பது சரியான நடவடிக்கை ஆகும்.
இந்த செய்தியையும் படிங்க…
இதற்காக கூட்டமைப்பின் சார்பில் தமிழக முதல்வருக்கும், தமிழக அரசுக்கும் பாராட்டு தெரிவித்துக்கொள்கிறோம். இனி வருங்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க அனைத்து தனியார், அரசு பள்ளிகளில் அரசின் சார்பில் புகார் பெட்டிகள் வைக்கப்படவேண்டும்.
3 மாதங்களுக்கு ஒருமுறை அரசு அதிகாரிகள் பள்ளியில் ஆய்வு மேற்கொள்ளவேண்டும். பள்ளி பெண் குழந்தைகள் மீது பாலியல் தொல்லை குற்றங்களில் ஈடுபடும் ஆசிரியர்கள், அதிகாரிகள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கும் வகையில் கடுமையான சட்டத்திருத்தம் கொண்டு வரவேண்டும். பள்ளி குழந்தைகளின் பாதுகாப்பிற்காக தமிழக அரசு மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் அனைத்துக்கட்சிகளும் ஆதரவு தரவேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.