PLUS TWO EXAM – எப்போது நடக்கும்?
CBSC PLUS TWO பொதுத்தேர்வு அறிவிப்பு வந்த பிறகு தமிழகத்தில்PLUS TWO வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து முடிவு செய்யப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால், PLUS TWO வகுப்பு பொதுத்தேர்வை எப்போது நடத்துவது குறித்த அவசர ஆலோசனை கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.
இந்த செய்தியையும் படிங்க…
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் புதுப்பிக்க தவறியவர்களுக்கு-தமிழக அரசு அறிவிப்பு..!!
தமிழக முதலமைச்சார் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பள்ளிகல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா, ஆணையர் நந்தகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
CBSC PLUS TWO பொதுத்தேர்வு தொடர்பான அறிவிப்பு வெளியான பிறகு தமிழகத்தில்PLUS TWO வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து முடிவு செய்யப்படும் எனவும், கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீதான புகார்கள் குறித்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளும் வகையில் கல்விக் கட்டண நிர்ணயக் குழுவை வலுப்படுத்தவது குறித்தும் இக்கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.