Breaking: இட ஒதுக்கீட்டில் போலிச்சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்த்தால் கடுமையான நடவடிக்கை – சென்னை உயர்நீதிமன்றம் ..!!
சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல்:
கோவை பாரதியார் பல்கலை.யில் நூலக தொழில்நுட்ப அதிகாரிக்கு தகுந்த தகுதி இல்லாத நிலையில், அவரை பணி நியமனம் செய்ததாக வழக்கு தொடுக்கப்பட்டது. மேலும், அவரை பணியில் இருந்து நீக்கம் செய்ய வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
போலிச்சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்த்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்:
இந்த மனு மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் அமர்வில் விசாரணைக்கு வந்த நிலையில், ” பல்கலைக்கழகங்கள் பணி நியமனத்தில் வெளிப்படை தன்மையை பின்பற்ற வேண்டும். போலிச்சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்த்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த செய்தியையும் படிங்க…
WBC அதிகப்படுத்தி, நோய்த்தொற்றில் இருந்து நுரையீரலை காக்க..!!
இட ஒதுக்கீட்டில் பணி நியமனம் பெற மதம் மாறியது கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். சம்பந்தப்பட்டவர்களை பணிநீக்கம் செய்ய பல்கலை.க்கு உத்தரவிடப்படுகிறது. அவர்களுக்கு வழங்கிய ஊதியத்தை திரும்பி வசூலிக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது ” என நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளார்.