BREAKING NEWS:CBSE 12-ம் வகுப்பு தேர்வு ரத்து- மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை..!! - Tamil Crowd (Health Care)

BREAKING NEWS:CBSE 12-ம் வகுப்பு தேர்வு ரத்து- மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை..!!

 BREAKING NEWS:CBSE 12-ம் வகுப்பு தேர்வு ரத்து- மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை..!!

CBSC +2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் PLUS TWO பொதுத்தேர்வு நடத்துவது குறித்து நாளை முதல்வர் அவசர ஆலோசனை. தமிழகத்தில் PLUS TWO வகுப்பு பொதுத் தேர்வு எப்போது நடத்துவது..? எப்படி நடத்துவது..? என்பது குறித்து இன்று அமைச்சர் அன்பில் மகேஷ் உடன் முதல்வர் ஆலோசனையில் ஈடுபட்டார். 

முதல்வர் ஸ்டாலினுடனான ஆலோசனைக்கு பின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், CBSC தேர்வை பொறுத்தே தமிழ் நாட்டில் PLUS TWO தேர்வு நடத்துவது தொடர்பாக முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தார். இதற்கிடையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை PLUS TWO வகுப்பு தேர்வு தொடர்பாக மத்திய கல்வி உயர் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார். 

இந்த ஆலோசனையில் கொரோனா பரவல் காரணமாக CBSE PLUS TWO தேர்வு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்தார்.

இந்நிலையில், CBSC +2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில்PLUS TWO பொதுத்தேர்வு நடத்துவது குறித்து நாளை முதல்வர் அவசர ஆலோசனையில் ஈடுபடவுள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி , செயலாளர் காகர்லா உஷா, ஆணையர் நந்தகுமார் ஆகியோர் கலந்துகொள்ள உள்ளனர்.

Leave a Comment