BREAKING NEWS: 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்தா..??
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரனோ வைரஸ் corona virus பாதிப்பு காரணமாக பல்வேறு தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில் தமிழகத்தில் Plus Two தேர்வு ரத்து செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்தது
நேற்று இரவு பிரதமர் மோடி CBSC Plus Two தேர்வு ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டதை அடுத்து தமிழகத்திலும் Plus Two தேர்வு ரத்து செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
இந்த நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் இன்று கல்வி அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனைக்கு பின்னர் அவர் முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்களை சந்தித்து இது குறித்து ஆலோசனை ஈடுபடுவார் என்றும் அதன்பின்னர் Plus Two தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது
பள்ளிக்கல்வித் துறை வட்டாரங்களில் இருந்து வெளிவந்துள்ள தகவலின்படி பிளஸ் 2 தேர்வு இந்த ஆண்டு ரத்து செய்யப்படவே அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. இருப்பினும் தேர்வு ரத்து செய்யப்பட்டால் மதிப்பெண்கள் எவ்வாறு கணக்கிடுவது குறித்து இன்றைய ஆலோசனைகள் தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது