முக்கிய செய்தி :தமிழகத்தில்PLUS TWO பொதுத்தேர்வு குறித்து- கல்வி அமைச்சரின் இன்றைய பேட்டி..!! - Tamil Crowd (Health Care)

முக்கிய செய்தி :தமிழகத்தில்PLUS TWO பொதுத்தேர்வு குறித்து- கல்வி அமைச்சரின் இன்றைய பேட்டி..!!

முக்கிய செய்தி: தமிழகத்தில் PLUS TWO பொதுத்தேர்வு குறித்து -கல்வி அமைச்சரின் இன்றைய பேட்டி..!!

Plus Two பொதுத் தேர்வு நடத்துவது குறித்து மாணவர்களின் பெற்றோர், கல்வியாளர்களுடன் கருத்து கேட்ட பின் முடிவெடுக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.

Plus Two வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக முதல்வருடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆலோசனையில் ஈடுபட்டார். ஆலோசனைக்கு பின்னர் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, கல்வியாளர்கள், மருத்துவ வல்லுநர்கள் உடன் இரண்டு நாட்களுக்குள் ஆலோசித்து முடிவு எடுக்கலாம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

இந்த செய்தியையும் படிங்க…

 Plus Two பொதுத்தேர்வு- பெற்றோர், மாணவர்கள் கருத்து தெரிவிக்க மின்னஞ்சல் அறிவிப்பு..!!  

இதனால், தமிழகத்தில் Plus Twoபொதுத் தேர்வு நடத்துவது குறித்து கருத்து கேட்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மாணவர்களின் பெற்றோர், கல்வியாளர்களுடன் கருத்து கேட்ட பின் முடிவெடுக்கப்படும். அனைத்து தரப்பின் கருத்துக்களை கேட்டபின் Plus Two தேர்வு குறித்து இரண்டு நாட்களில் முடிவெடுக்கப்படும் என தெரிவித்தார்.

Plus Two பொதுத் தேர்வு நடத்துவதில் மாணவ ,மாணவிகளுக்கு இடையே இருவேறு கருத்துகள் நிலவுகிறது. சில மாணவர்கள் தேர்வு நடத்த வேண்டும் என்றும் சில மாணவர்கள் தேர்வு நடத்த வேண்டும் என்றும் தெரிவித்து வருவதாக கூறினார். மாணவர்களின் உடல்நலன், பாதுகாப்பு முக்கியம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். Plus Two பொதுத்தேர்வு மதிப்பெண் முக்கியம் என்பதால் கவனத்துடன் முடிவெடுக்க வேண்டிய சூழல் உள்ளது என தெரிவித்தார்.

Leave a Comment