பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, பள்ளிக்கல்வித்துறை இயக்குனர்( School Directorate) உத்தரவு..!! - Tamil Crowd (Health Care)

பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, பள்ளிக்கல்வித்துறை இயக்குனர்( School Directorate) உத்தரவு..!!

 பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, பள்ளிக்கல்வித்துறை இயக்குனர்( School Directorate) உத்தரவு..!!

தமிழக பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் தமிழகத்தில் உள்ள பள்ளிகளின் தலைமை ஆசிரியருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். இது குறித்த கடித்தத்தில், ” இந்திய அளவில் PLUS TWO CBSE மாணவர்களுக்கான தேர்வு ரத்து செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியையும் படிங்க…

Plus Two பொதுத்தேர்வு- பெற்றோர், மாணவர்கள் கருத்து தெரிவிக்க மின்னஞ்சல் அறிவிப்பு..!!  

தமிழகத்தில் 2 தினங்களுக்கு பிறகு PLUS TWO தேர்வுகள் தொடர்பாக அறிவிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்து இருந்தார்.

நாளை இணையவழியில் பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் மாணவர்கள், மாணவர்களின் பெற்றோர், கல்வியாளர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தி பதில் தெரிவிக்க வேண்டும். மாணவர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் எண்ணங்கள் குறித்த தகவலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு (CEO) தெரியப்படுத்த வேண்டும்.

முதன்மை கல்வி அலுவலர்கள் CEO தலைமை ஆசிரியர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை பள்ளிக்கல்வித்துறை ஆணையருக்கு தெரியப்படுத்த வேண்டும். இந்த கருத்துகள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கு தெரியப்படுத்தப்பட்டு, முதல்வருக்கு தெரிவிக்கப்படும்.

இந்த செய்தியையும் படிங்க…

Plus Two பொதுத்தேர்வு நடக்குமா..?? முதல்வர் ஆலோசனை..! !  

இதனையடுத்து PLUS TWO  தேர்வுகள் தொடர்பாக முதல்வர் அறிவிப்பார்.  இன்று தமிழகத்தில் உள்ள மேல்நிலைப்பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் கட்டாயம் காணொளி கூட்டத்தினை நடத்தி முடிவுகளை தெரிவிக்க வேண்டும் ” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Comment