BREAKING NEWS: ஆசிரியர் தகுதித் தேர்வு TET சான்றிதழ்-ஆயுள் முழுவதும் செல்லுபடியாகும்..!!
ஆசிரியர் தகுதி தேர்வில் TET தேர்ச்சி பெற்றவர்களின் சான்றிதழ் 7 ஆண்டுகள் மட்டுமே செல்லுபடியாகும் என்ற விதிமுறையை மாற்றி தற்போது ஆயுள் முழுவதும் TET சான்றிதழ் செல்லுபடியாகும் என்று மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பு 2011 முதல் ஆசிரியர் தகுதி சான்றிதழ் பெற்றவர்களுக்கு பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காலாவதியான சான்றிதழ்களை புதுப்பிக்கும் பணிகளை மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கற்பித்தல் துறையில் பணியாற்ற விரும்பும் நபர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.