CBSE PLUS TWO : மதிப்பெண் மதிப்பிடும் வழிமுறைகளை நிர்ணயிக்க- Supreme Court உத்தரவு..!!
CBSC Plus Two மாணவர்களுக்கு மதிப்பெண்களை மதிப்பிடுவதற்கான வழிமுறைகளை 2 வாரங்களில் நிர்ணயிக்க மத்திய கல்வி வாரியங்களுக்கு Supreme Court உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து பிரதமர் மோடி தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற CBSE மற்றும் CISCE Plus Two பொதுத் தேர்வை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டது. மாணவர்களின் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.
இந்நிலையில் Plus Two பொதுத் தேர்வு தொடர்பான வழக்கு Supreme Court-ல் நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், தினேஷ் மகேஷ்வரி ஆகியோரைக் கொண்ட அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது Plus Two பொதுத் தேர்வை ரத்து செய்யும் மத்திய அரசின் முடிவுக்கு நீதிபதிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர். இதையடுத்து Plus Two மாணவர்களுக்கு மதிப்பெண்களை மதிப்பீடு செய்வதற்கான வழிமுறைகளை நிர்ணயித்து, 2 வாரங்களில் தங்களின் பார்வைக்கு வைக்க வேண்டும் என CBSC மற்றும் CISCE-க்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்த செய்தியையும் படிங்க…
BREAKING NEWS: ஆசிரியர் தகுதித் தேர்வு TET சான்றிதழ்-ஆயுள் முழுவதும் செல்லுபடியாகும்..!!
‘வழிமுறைகளில் யாருக்கேனும் ஆட்சேபம் இருந்தால் அதனை நாங்கள் ஆராய்வோம். பொதுத் தேர்வு ரத்து கோரிய மனுதாரர்களுக்கு இந்த வழிமுறைகளும் முக்கியமானது’ என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.