அரசு / அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள்&பணியாளர்கள் அனைவரும் JUNE -20க்குள் கொரானா தடுப்பூசி கண்டிப்பாக போட வேண்டும் - CEO Proceeding! - Tamil Crowd (Health Care)

அரசு / அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள்&பணியாளர்கள் அனைவரும் JUNE -20க்குள் கொரானா தடுப்பூசி கண்டிப்பாக போட வேண்டும் – CEO Proceeding!

  அரசு / அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள்&பணியாளர்கள் அனைவரும் JUNE -20க்குள்  CORONA  தடுப்பூசி கண்டிப்பாக போட வேண்டும் – CEO Proceeding!

திருவள்ளூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின் CEO ஆளுகைக்குட்பட்ட அனைத்து வகை அரசு / அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் , அலுவலர்கள் / அலுவலக பணியாளர்கள் அனைவரும் வரும் 20.06.2021 க்குள் கொரானா CORONA  வைரஸ் தடுப்புக்கான தடுப்பூசி ( Vaccine ) கண்டிப்பாக போடப்பட்டிருத்தல் வேண்டும். 

 இந்த செய்தியையும் படிங்க…

கொரோனா வைரஸ் தடுப்பூசி கேள்விகளும், பதில்களும்..!!

அவ்வாறு தடுப்பூசி ( Vaccine ) போடப்பட்டவர்களுக்கு அரசு அளிக்கும் சான்றிதழ் நகலை உரியவரிடமிருந்து பெற்று அந்தந்த ஒன்றியத்திற்குரிய அலுவலர்கள் பாதுகாப்பாக வைத்திருக்குமாறும் , போடாதவர்களுக்குரிய காரணத்தை ஆதாரத்துடன் பெற்று வைத்திருக்குமாறும் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 

மேலும் இத்தகவல் குறித்து மெத்தனம் காட்டாமல் நடவடிக்கை மேற்கொண்டு இணைப்பிலுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து 19.06.2021 க்குள் இவ்வலுவலக மின்ன ஞ்சலுக்கு அனுப்புமாறு அனைத்து மாவட்டக்கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டாரக்கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

Leave a Comment