கிவி பழத்தில் உள்ள வைட்டமின்கள் , பயன்கள் என்ன..!!
- கிவி பழம் ஆஸ்துமாவை சரிசெய்யும் திறன் கொண்டது. இதற்கு இதில் உள்ள Vitamin C தான் காரணம்.
- இந்த பழம் மூச்சு விடுவதில் ஏற்படும் சிரமம், இரவில் வரும் வறட்டு இருமல் போன்றவற்றை சரிசெய்து, நுரையீரலின் செயல்பாட்டிற்கு உதவும். முக்கியமாக ஆஸ்துமா நோயாளிகளுக்கு கிவி பழம் மிகவும் நல்லது.
- கிவி பழம் எலும்புகளின் வளர்ச்சிக்கும் பற்களின் ஆரோக்கியத்திற்கும் கால்சியம் சத்துக்கள் நிறைந்துள்ளது. கிவி பழம் உடலுக்கு ஆற்றலை வழங்கும். உடலால் போதிய அளவில் அத்தியாவசிய அமினோ அமிலங்களை உற்பத்தி செய்ய முடியாது.
- கிவி பழத்தில் உள்ள வைட்டமின் சி ஒரு நல்ல ஆன்டி-ஆக்ஸிடன்ட். இது ப்ரீ-ராடிக்கல்களால் செல்கள் பாதிக்கப்படுவதைத் தடுத்து, புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கும்.
- கிவிப் பழத்தில் டயட்டரி நார்ச்சத்துக்கள் வளமான அளவில் உள்ளது. இது கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவும். இதய நோயின் அபாயத்தைத் தடுக்கும் மற்றும் இரத்த சர்க்கரை அளவில் ஏற்படும் ஏற்ற இறக்கத்தைத் தடுக்கும்.
- கர்ப்ப காலத்தில் பெண்கள் கிவி பழத்தை சாப்பிடுவது நல்லது. ஏனெனில் இதில் ஃபோலிக் அமிலம் அதிகம் உள்ளது. போலிக் அமிலம் கருவின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமான சத்தாகும்.
- கிவி பழத்தை ஒருவர் தினமும் ஒன்று சாப்பிட்டு வந்தால், அதில் உள்ள Vitamin C நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தும். உடல் எடையைக் குறைக்க நினைப்போருக்கு கிவி மிகச்சிறப்பான பழம்.
இந்த செய்தியையும் படிங்க…