BREAKING: PLUS ONE சேர்க்கைக்கு -புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகள் வெளியீடு..!!
பத்தாம்(10th) வகுப்பில், ‘ALL PASS’ செய்யப்பட்ட மாணவர்களுக்கு சேர்க்கைக்கு புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகளை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், மேல்நிலை பிரிவுகளில் உள்ள இடங்களின் எண்ணிக்கைக்கு உட்பட்டு, மாணவர்களின் விருப்பத்துக்கு ஏற்ப, பாட பிரிவுகளை ஒதுக்கீடு செய்யலாம்.
இந்த செய்தியையும் படிங்க…
Degree-முடித்தவர்க்கு ரூ.32,000/- ஊதியத்தில் வேலை..!!
அனுமதிக்கப்பட்டுள்ள இடங்களுக்கு மேலாக, மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வந்தால், ஒவ்வொரு பிரிவிலும், 15 சதவீதம் வரை கூடுதல் மாணவர்களை சேர்க்கலாம். அதிகப்படியான விண்ணப்பங்கள் வந்தால், மாணவர்களுக்கு அப்பிரிவுடன் தொடர்புடைய, கீழ்நிலை வகுப்பு பாடங்களில் இருந்து, 50 வினாக்கள் அடங்கிய வினாத்தாள் தயாரிக்கப்பட்டு, தேர்வு நடத்த வேண்டும்.அதில், மாணவர்கள் பெறும் மதிப்பெண் அடிப்படையில் பாடப்பிரிவுகளை ஒதுக்கலாம். PLUS ONE சேர்க்கை முடித்த மாணவர்களுக்கு, இந்த மாதம் மூன்றாவது வாரம் முதல், அரசின் வழிகாட்டுதல்படி வகுப்புகளை துவக்கலாம்.