DO YOU KNOW WHY BACK PAIN OCCURS..??(முதுகு வலி வருவது ஏன் தெரியுமா..??)
நவீன வாழ்க்கையில் உள்ள அழுத்தம் (Stress) தான் முதுகுவலியின் முதற்பெரும் காரணமாகக் கூறலாம். எப்போதுமே நாம் தலைதெறிக்க ஓடும் அவசரத்திலும் பல்வகைச் சூழ்நிலை அழுத்தங்களுக்கு ஆளாகி இருக்கிறோம்.
இந்த செய்தியையும் படிங்க…
PUNJAB NATIONAL BANK JOB 2021 – ஒரு வருகைக்கு ரூ.15,000/- ஊதியம்..!!
- எதிர்பாராமல் அதிகப் பளுவை ஒருவர் தூக்க முயலும்போது முதுகெலும்பை நிலை நிறுத்தியுள்ள தசைகள் போதிய இணக்கத்தைத் தரத் தவறிவிடுகின்றன. அது முதுகைப் பாதித்து வலியில் முடிகிறது.
- முதுகைக் குனியவைத்த நிலையில் பொருள்களைத் தரையில் இருந்து தூக்க முயற்சிப்பது, அதிக உயரத்தில் இருந்து குதித்து சடாலென்று தரையில் இறங்குவது,இவை இரண்டுமே அபாயகரமானவை.
- திடீரென்று திரும்புவது, அதுவும் ஒரு கனமான பொருளை வைத்த நிலையில் திரும்புவது முதுகுவலிக்கு வழி வகுக்கும்.
- சிலரது பணிகள் (வேலை நிலை) முதுகுவலி வரக் காரணமாகி விடுகின்றன. அதுவும் முதுகிற்கு அதிகத் தொல்லை தரும் பணி செய்பவர்களுக்கே இந்த வலி வந்துவிடும்.
- உயர்மட்ட நிர்வாக அதிகாரிகள், டைப்பிஸ்டுகள், கீ-போர்டு ஆபரேட்டர்கள், போர்ட்டர்கள் முதலியோரைக் கூறலாம்.
- தொடர்ந்து ஒரே இடத்தில் உட்கார்ந்திருப்பது முதுகெலும்பைத் தாங்கும் தசைகள் பலவீனமுற வாய்ப்பளிக்கின்றன.
- பொருத்தமற்ற நாற்காலியில் அமர்வதில் இருந்து இசகு பிசகான முறையில் உட்கார்ந்தே நின்ற படியோ (உதாரணங்கள் : பீடி சுற்றுவோர், கண்டக்டர்கள்) வேலை செய்வது வரை முதுகு வலி வரக் காரணங்களாகிவிடும்.