BREAKING :கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகை கடன் தள்ளுபடி : விரைவில் அரசாணை..!!
கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகை கடன் தள்ளுபடிக்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என்று அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
திமுக ஆட்சி பொறுப்புக்கு வந்தால் கூட்டுறவு வங்கிகளில் மகளிர் வாங்கிய சுய உதவிக்குழு கடன்கள் ரத்து செய்யப்படும் என்றும் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றும் முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதேபோல் திமுக ஆட்சிக்கு வந்தால் கல்வி கடன் ரத்து, விவசாய கடன் ரத்து என ஸ்டாலின் அறிவித்தார். ஆனால் முந்தைய அதிமுக ஆட்சியிலேயே விவசாய கடன் தள்ளுபடி , 6 சவரன் நகைகளுக்கான கடன் தள்ளுபடி ஆகியவை ரத்து செய்யப்பட்டு விட்டது.தற்போது திமுக ஆட்சிக்கு வந்துள்ளதை அடுத்து 5 சவரன் நகை கடன் தள்ளுபடி எப்போது அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்க்கப்பட்டது.
இந்த செய்தியையும் படிங்க…
NCOIS வேலைவாய்ப்பு 2021 –NO EXAM..!!