PLUS ONE நுழைவுத் தேர்வு ரத்து : பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு..!! - Tamil Crowd (Health Care)

PLUS ONE நுழைவுத் தேர்வு ரத்து : பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு..!!

 PLUS ONE நுழைவுத் தேர்வு ரத்து : பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு..!!

PLUS ONE  நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. கொள்குறி முறையில் PLUS ONE வகுப்புக்கு நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஒரே பிரிவில் கூடுதலாக மாணவர்கள் சேர விரும்பினால் நுழைவுத் தேர்வு நடத்த முன்பு கூறப்பட்டது. 10th பாடத்தின் அடிப்படையில் நுழைவுத்தேர்வு எதுவும் நடத்த தேவையில்லை என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

இந்த செய்தியையும் படிங்க…

DO YOU KNOW WHY BACK PAIN( முதுகு வலி) OCCURS..??  

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் அனுமதிக்கப்பட்டுள்ள இடங்களுக்கு மாணவர் சேர்க்கை கோரும் நிலையில்  COVID பெருந்தொற்று காரணமாக ஒவ்வொரு பிரிவிலும் 10 முதல் 15 சதவீதம் மாணவர்களை சேர்த்துக்கொள்ளலாம். அதிகப்படியான விண்ணப்பங்கள் வரும் பிரிவுகளுக்கு 9th மதிப்பெண்களை அடிப்படையாக கொண்டு மாணவர்களின் விருப்பத்தின் படி பிரிவுகளை ஒதுக்கீடு செய்யலாம் என்று வழிமுறைகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. 10th அவர்கள் எழுதவில்லை. எனவே 9th மதிப்பெண் அடிப்படையில் அவர்களுக்கு பாடப்பிரிவுகளை ஒதுக்க வேண்டும். குறிப்பாக அறிவியல் பாடப்பிரிவை அதிகமானவர்கள் கேட்கிறார்கள். வணிகவியல் பாடப்பிரிவை கேட்பதாகவும் தகவல் வந்துள்ளது. எனவே 9thவகுப்பில் எடுத்த மதிப்பெண்களின் அடிப்படையில் PLUS ONE வகுப்பு பிரிவுகளை ஒதுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Comment