LOCKDOWN நீட்டிப்பா? அதிகாரிகளுடன் முதலமைச்சர் JUNE 10 ஆலோசனை..!!
LOCK DOWN நீட்டிப்பது குறித்து அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை மேற்கொள்கிறார்.
இந்த செய்தியையும் படிங்க…
கருப்பு பூஞ்சை(BLOCK FUNGI) நோய் – வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது: தமிழ்நாடு அரசு..!!
தமிழகம் முழுவதும் CORONA பரவல் படிப்படியாக குறைந்தாலும், உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில், LOCKDOWN நீட்டிப்பது தொடர்பாகவும், கூடுதல் தளர்வுகள் வழங்கப்படுவது தொடர்பாகவும் தமிழக அரசின் முக்கிய அதிகாரிகளுடன் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை மேற்கொள்கிறார்.
சென்னை தலைமை செயலகத்தில் நடைப்பெறும் இந்த ஆலோசனையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமை செயலாளர் இறையன்பு, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், வருவாய் துறை செயலாளர் குமார் ஜெயந்த், டிஜிபி திரிபாதி, சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் கலந்துக்கொள்ள உள்ளனர்.
தமிழகம் முழுவதும் அதிகரித்து வந்த CORONA பரவலை கட்டுப்படுத்த கடந்த MAY 10 ஆம் தேதி முதல் தளர்வுகளுடன் கூடிய LOCKDOWN பிறப்பிக்கப்பட்டது. ஆனால் பலர் ஊரடங்கில் தேவையின்றி சுற்றியதால் CORONA தொற்று தொடர்ந்து அதிகரித்து வந்தது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் JUNE 7 தேதி வரை நடைமுறையில் இருந்தது.
பின்னர் பொதுமக்களின் நலன் கருதி JUNE 7ம் தேதிக்கு பின் பல்வேறு தளர்வுகள் தமிழக அரசு சார்பில் அளிக்கப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது.
தமிழகம் முழுவதும்CORONA பாதிப்பு படிப்படியாக குறைந்து வரும் அதே நேரத்தில் உயிரிழப்புகள் தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. கடந்த மாதம் 36 ஆயிரத்திற்கும் அதிகமாக இருந்த CORONA பாதிப்பு தற்போது 17321 ஆக குறைந்துள்ளது. இருந்தும் தினமும் 400க்கும் அதிகமானோர் உயிரிழந்து வருகின்றனர்.
இந்த நிலையில், LOCKDOWN நீட்டிப்பது தொடர்பாகவும், மேலும் கூடுதல் தளர்வுகள் அளிக்கலாமா ?என்பது தொடர்பாகவும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.
இந்த செய்தியையும் படிங்க…
வீடுகளுக்கான துல்லியமான மின்கட்டணத்தை கணக்கிட்டு செலுத்துவது எப்படி?… மின்வாரியத்துறை விளக்கம்..!!