TESTOSTERONE குறைவாக இருக்கும்ஆண்களை மோசமாக தாக்குகிறது- CORONA VIRUS..!!
ஆண்களை மோசமாக தாக்குகிறது CORONA VIRUS. கடந்த ஓராண்டு முழுதும் கிடைத்த தரவுகளின் அடிப்படையில், மருத்துவர்கள் இந்த முடிவுக்கு வந்துள்ளனர்.
ஆனால், ஏன்? பெண்களை விட ஆண்கள் அடிக்கடி வெளியே செல்வது, அதிக நேரம் வெளியே வலம் வருவது போன்றவற்றால் தான், அவர்களை, கோவிட் – 19 அதிகம் தாக்குகிறது.என்றாலும், உடலியல் ரீதியிலான வேறு காரணங்களும் இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர்.
இந்த செய்தியையும் படிங்க…
DO YOU KNOW WHY BACK PAIN( முதுகு வலி) OCCURS..??
ஆண்களின் உடலில் சுரக்கும் ஹார்மோனுக்கு டெஸ்ட்டோஸ்டெரோன்(TESTOSTERONE) என்று பெயர். இந்த ஹார்மோனின் அளவு, சராசரிக்கும் குறைவாக இருக்கும் ஆண்களுக்கு கொரோனா தாக்குதல் எளிதில் ஏற்படுவதும், அந்த நோயின் தீவிரம் மற்றவர்களைவிட கூடுதலாக இருப்பதும் மருத்துவ ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.அமெரிக்காவிலுள்ள வாஷிங்டன் மருத்துவக் கல்லுாரியின் ஆய்வாளர்கள், 149 நோயாளிகளிடம் நடத்திய ஆய்வில் இந்த முடிவு தெரியவந்துள்ளது.
சோதனைக்கு உட்படுத்தப்பட்ட நோயாளிகள், மருத்துவமனைக்கு வரும்போதே, TESTOSTERONE குறைந்த அளவுடன் வந்தனர். அதன் பிறகு வந்த நாட்களில், அவர்களில் யாருக்கெல்லாம் மேலும் TESTOSTERONE அளவு குறைந்ததோ, அவர்களுக்கு கோவிட் – 19 நோயின் தாக்குதல் தீவிரமாகி கொண்டே போனது. இதனால், ஆண்களுக்கு CORONA வருவதும், அவை அதிகம் பாதிப்பை ஏற்படுத்துவதும், என்ற ஹார்மோனின் அளவை பொறுத்தது என, வாஷிங்டன் மருத்துவக் கல்லுாரி ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.