நகரப் பேருந்துகளில் இவர்களுக்கும் -கட்டணம் கிடையாது:தமிழக அரசு அறிவிப்பு..!!
தமிழகம் முழுவதும் நகரப் பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகளுடன் பயணிக்கும் ஒரு உதவியாளரும் டிக்கெட் எடுக்க வேண்டாம் என தமிழக அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்த செய்தியையும் படிங்க…
LOCKDOWN நீட்டிப்பா..?? :அதிகாரிகளுடன் முதலமைச்சர் JUNE 10 -ல் ஆலோசனை..!!
தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் கட்டுப்பாட்டில் இயங்கும், சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் மகளிர் அனைவரும் கட்டணமின்றி பயணிக்கலாம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதனையடுத்து இந்த திட்டம் கடந்த மாதம் 8ஆம் தேதி நடைமுறைப்படுத்தப்பட்டது.
இதன்மூலம் போக்குவரத்துக் கழகங்களுக்கு ஏற்படும் கூடுதல் செலவுத் தொகையான ரூ.1,200 கோடியை, அரசு மானியமாக வழங்கி ஈடுகட்டும் என்றும் அறிவிக்கப்பட்டது . அதனைத் தொடர்ந்து திருநங்கைள் தங்களுக்கும் சலுகை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
அவர்களின் கோரிக்கையை ஏற்று திருநங்கைகளுக்கும் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்பிறகு மாற்றுத்திறனாளிகளுக்கும் சலுகை வழங்கப்பட்டது.
இந்த செய்தியையும் படிங்க…
ஆசிரியர்கள் உத்தரவை மீறினால்- துறை ரீதியாக நடவடிக்கை : பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை..!!
இந்நிலையில் தமிழகம் முழுவதும் நகரப் பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகளுடன் செல்லும் அவர்களது உதவியாளர் ஒருவருக்கு கட்டணம் கிடையாது என்ற அதிரடி அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டையை நடத்துநரிடம் காண்பிக்க வேண்டும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.