ஊரடங்கு(LOCK DOWN) நீட்டிப்புசெய்வதா..?? மேலும் தளர்வுகள் அளிப்பதா..??:முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை..!!
ஊரடங்கி(LOCKDOWN)னை நீட்டிப்பு செய்வதா? மேலும் தளர்வுகள் அளிப்பதா என்பன குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று உயரதிகாளுடன் ஆலோசனை நடத்துகிறார்.
இந்த கூட்டத்தில், மக்கள் நலத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமைச்செயலாளர் இறையன்பு, சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், டிஜிபி திரிபாதி, சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், வருவாய் துறை முதன்மை செயலாளர் குமார்ஜிவால், சென்னை மாநகராட்சி ஆணையர் சுகன் தீப் சிங் பேடி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.
இந்த செய்தியையும் படிங்க…
LOCKDOWN நீட்டிப்பா..?? :அதிகாரிகளுடன் முதலமைச்சர் JUNE 10 -ல் ஆலோசனை..!!
இந்த ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளைக் கொண்டு மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை மேற்கொள்கிறார் முதல்வர். பின்னர் ஊரடங்கு நீட்டிப்பது தொடர்பாகவும், தளர்வுகள் தொடர்பாகவும் அறிவிக்க இருக்கிறர் முதல்வர்.
கடந்த MAY 24ம் தேதியில் இருந்து தளர்வுகள் இல்லாத ஊரடங்கினை அறிவித்திருந்தார் முதல்வர். இந்த ஊரடங்கு 2 வாரங்கள் நீட்டிப்பு செய்யப்பட்டது. ஆனால், 7ம் தேதியில் இருந்து ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. 11 மாவட்டங்களில் மட்டும் முழு ஊடரங்கு நீடிக்கிறது.
ஊரடங்கினால் LOCKDOWN CORONA தொற்று படிப்படியாக குறைந்துவருவதால் ஊரடங்கு நீட்டிக்கப்படவே வாய்ப்பிருக்கிறது என்கின்றன தகவல்கள். ஊரடங்கு LOCKDOWN நீட்டிக்கப்படும் பட்சத்தில் 11 மாவட்டங்களில் தொடர்ந்து முழு ஊரடங்கா? இல்லை, தளர்வுகள் அளிக்கப்படுமா? என்பதை அறிவிப்பது குறித்தும் முதல்வர் ஆலோசிக்க இருக்கிறார்.