RATION 2வது தவணை- ரூ.2,000க்கான டோக்கன் JUNE 11: முதல் விநியோகம்..!!
RATION: 2வது தவணையாக ₹2,000 CORONA நிவாரண தொகை பெறுவதற்கான டோக்கன் இன்று முதல் விநியோகிக்கப்படுகிறது.
இந்த செய்தியையும் படிங்க…
தமிழ்நாட்டில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கை நீட்டிக்க- உயர் அதிகாரிகள் பரிந்துரை..!!
தமிழ்நாடு முழுவதும் JUNE 15 முதல் இரண்டாம் கட்ட கொரோனா நிவாரண தொகை ரூபாய் 2000 மற்றும் 14 வகையான இலவச மளிகை பொருட்கள் விநியோகம் தொடங்க உள்ளது.தமிழ்நாட்டில் அரசு குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் CORONA நிவாரண தொகையாக MAY மாதம் 2000 ரூபாய் வழங்கப்பட்டது.
அதேபோல் JUNE மாதமும் 2000 ரூபாய் இரண்டாவது தவணையாக வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். அரிசியுடன் கூடிய 14 வகையான மளிகைப் பொருட்களும் வழங்கப்படும் என அவர் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி JUNE 11 முதல் வருகின்ற 14ஆம் தேதி வரை ரூபாய் இரண்டாயிரம் மற்றும் மளிகை பொருட்கள் டோக்கன் வீடு வீடு வீடாக விநியோகிக்கப்பட உள்ளது. கூட்ட நெரிசல் இல்லாத நேரத்தில் மக்கள் நிவாரண நிதியை பெற்றுக் கொள்வதற்கு வசதியாக காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை யிலும் RATION கடைகள் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் Corona பாதிப்பு நிவாரண உதவித்தொகையாக 2 ஆயிரம், 14 வகை மளிகை பொருட்கள் உதவித் தொகை, மளிகை பொருட்களுக்கான ரேஷன் கடை டோக்கன் இன்று முதல் வீடு வீடாக வழங்கப்படுகிறது.
இந்த செய்தியையும் படிங்க…
கடையில் வாங்கும் பொருட்கள் காலாவதி ஆகி இருந்தால் -உடனே என்ன செய்ய வேண்டும்..??
இதன் மூலம் 2,09,81,900 அரிசி குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறுவார்கள் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.JUNE 15 முதல் 2000 மற்றும் மளிகை பொருட்கள் தொகுப்பினை RATION கடைகளில் பெற்றுக் கொள்ளலாம்.