நடப்பு கல்வியாண்டில் - மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கை..?? - Tamil Crowd (Health Care)

நடப்பு கல்வியாண்டில் – மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கை..??

நடப்பு கல்வியாண்டில் – மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கை..??

நடப்பு கல்வியாண்டில் எந்த அடிப்படையில் மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறும் என்பதை, பள்ளிக்கல்வித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளுடன் ஆலோசனை நடத்தி அரசு அறிவிக்கும் என்று மருத்துவம் & மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியையும் படிங்க… 

அங்கீகாரம் இல்லாத பள்ளிகளை மூட- தொடக்க கல்வி இயக்குநரகம் உத்தரவு..!! 

சென்னை எழும்பூரில் உள்ள தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் மற்றும் மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கத்தில் ஆய்வு மேற்கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “அரசிடம் தற்போது போதிய மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் கையிருப்பில் உள்ளது. 

மருந்து விநியோகம் திருப்திகரமாக உள்ளது. கரும்பூஞ்சை(BLOCK FUNGI) நோயால் பாதிக்கப்படுபவர்களுக்கு உயிர்காக்கும் மருந்துகள் உடனுக்குடன் அனுப்பி வைக்கப்படும். NEET தேர்வு விஷயத்தில் மாணவர்களை குழப்ப வேண்டாம் என்று கூறும் மாநில பாஜக தலைவர் எல்.முருகன், தமிழ்நாட்டுக்கு NEET தேவையில்லை என்று மத்திய அரசிடம் பேசி அறிவித்தால் வரவேற்போம்.

தமிழ்நாட்டில் நடப்பு கல்வியாண்டில் எதன் அடிப்படையில் மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறும் என்பதை, பள்ளிக்கல்வித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளுடன் ஆலோசனை நடத்தி அரசு அறிவிக்கும். 

இந்த செய்தியையும் படிங்க…

  கடையில் வாங்கும் பொருட்கள் காலாவதி ஆகி இருந்தால் -உடனே என்ன செய்ய வேண்டும்..?? 

கடந்த ஆட்சியில் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்களுக்கு உணவு, தங்குமிடத்துக்கு செலவு செய்ததில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பது தெரியவந்துள்ளது. முறைகேட்டில் ஈடுபட்டது யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என எச்சரிக்கை விடுத்தார்.

Leave a Comment