NO EXAM,10th PASS ONLY : Southern Railway பயிற்சி வேலை- விண்ணப்பிப்பது எப்படி..?? - Tamil Crowd (Health Care)

NO EXAM,10th PASS ONLY : Southern Railway பயிற்சி வேலை- விண்ணப்பிப்பது எப்படி..??

 NO EXAM,10th PASS ONLY  : Southern Railway பயிற்சி வேலை- விண்ணப்பிப்பது எப்படி..??

தென்னக ரயில்வே துறையில் பணிபுரிந்து தொழில் பயில தமிழ்நாடு மாணவர்களுக்கு ஒரு பயிற்சி வேலை வாய்ப்பை தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

என்ன மாதிரியான வேலை ?

கதிரியக்கவியல், நோயியல் மற்றும் இருதயவியல், எலக்ட்ரீஷியன், டி.எஸ்.எல் மெக்கானிக், ஏர் கண்டிஷனிங் மெக்கானிக், எம்.எம்.வி, எலெக்ட்ரானிக்ஸ் மெக்கானிக், PASSA, எம்.எல்.டி கதிரியக்கவியல், எம்.எல்.டி நோயியல், எம்.எல்.டி இருதயவியல், தச்சு, வயர்மேன், டர்னர், ஃபிட்டர், வெல்டர், பெயிண்டர் ஆகிய மேற்கொண்ட பணிகளுக்கு பயிற்சி வேலைக்கு தென்னக ரயில்வேயில் ஆட்கள் தேவை என அறிவிக்கப்பட்டுள்ளது.

அடிப்படை தகுதி ?

தகுதி தேர்வுகள் எதுவுமே கிடையாது. 10-th பொதுத்தேர்வில் 50 சதவீத மதிப்பெண்ணுடன் தேர்ச்சி அடைந்திருக்கு வேண்டும் அல்லது ஐடிஐ படித்தவர்கள் அதில் தேர்ச்சி அடைந்திருக்க வேண்டும். அதன் அடிப்படையிலேயே மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்க குறைந்தபட்ச வயது 15 – இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் அதிகபட்ச வயது 22 முதல் 34 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

எத்தனை பணியிடங்கள் உள்ளன ?

மொத்தம் 3378 பயிற்சி பணிக்கான காலி இடங்கள் இருப்பதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. மொத்த பயிற்சி பணிக்கான காலம், ஒரு வருடத்தில் இருந்து 2 வருடம் வரை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எப்படி விண்ணப்பிக்க வேண்டும் ?

www.sr.indianrailways.gov.in என்ற இணையதளத்தில் சென்று பயிற்சி வேலைக்கு விண்ணப்பிக்கலாம். இணைய விண்ணப்பத்திற்கு ரூபாய் 100 கட்டணம் செலுத்தவேண்டும், SC/ST/மாற்று திறனாளிகள்/ மகளிர் ஆகியோர் கட்டணம் செலுத்த வேண்டாம். மாதம் ரூபாய் 7000 உதவித்தொகையாக வழங்கப்படும், பயிற்சி முடிவடைந்தவுடன் நிச்சயம் ரயில்வே பணியில் வேலைக்கு பணி அமர்த்தப்படுவார்கள் என்ற உத்தரவாதம் கிடையாது. ஆனால் இந்த பயிற்சியை முடித்தவர்களுக்கு 20 சதவீதம் பணி வழங்கலில் முன்னுரிமை வழங்கப்படும். விண்ணப்பிக்க கடைசி நாள் 30.06.2021, நேரம் மாலை 5 மணி வரை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியையும் படிங்க…

10th Pass:பெல்( BHEL) கம்பெனியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு.!!

Leave a Comment