CORONA-லிருந்து குணமடைந்தோர் ஒரு டோஸ் தடுப்பூசி போட்டால் போதுமா?
CORONA -ல் பாதிக்கப்பட்டுக் குணமடைந்தவர்கள் ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டால் போதுமானது என AIIMS மருத்துவமனையில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
CORONA பெருந்தொற்றில் இருந்து ஒவ்வொருவரும் தம்மைத் தற்காத்துக் கொள்ளும் வழியாகத் தடுப்பூசி இருக்கிறது. இந்தியாவில் இந்தாண்டு இறுதிக்குள்அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயித்து மத்திய மாநில அரசுகள் செயலாற்றி வருகின்றன.
இந்நிலையில், CORONA தொற்றால் லேசான அறிகுறிகளால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தடுப்பூசியின் ஒரு டோஸை மட்டும் செலுத்திக் கொண்டதால் போதுமானது என்று AIIMS மருத்துவமனை நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்த செய்தியையும் படிங்க…
10th ,PLUS ONE வகுப்பு மாணவர்களின் பெயர் பட்டியல் திருத்தம்: கல்வித்துறை அறிவிப்பு..!!
தடுப்புத்திறனியல் தேசிய ஆய்வு நிறுவனம் மற்றும் AIIMS மருத்துவனை இணைந்து நடத்திய இந்த ஆய்வில், CORONA VIRUS பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களுக்கு உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாக இருக்கும் என்பது தெரியவந்துள்ளது. லேசான தொற்று பாதிப்பிலிருந்து மீண்டவர்களிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில், 70 விழுக்காட்டினரின் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரித்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.