மூட்டு வீக்கம், எலும்புகள் வீக்கம் சிறந்த தீர்வு -வரகு அரிசி..!!
சிறு தானிய வகைகளில் ஒன்றான வரகு அரிசி, பாஸ்பரஸ், மக்னீசியம், நார்ச் சத்துகள், பொட்டாசியம் என அனைத்தையும் கொண்டுள்ளது. வரகு அரிசியின் மருத்துவ குணங்கள் குறித்து நாம் இப்போது பார்க்கலாம்.
- வரகு அரிசியானது அதிக அளவில் நார்ச்சத்தினைக் கொண்டதாக உள்ளது, மேலும் இதில் உள்ள நார்ச்சத்தானது ஒபேசிட்டி பிரச்சினை உள்ளவர்களுக்கு ஒரு சிறந்த தீர்வாக உள்ளது. அதாவது இது செரிமான சக்தியினை மேம்படுத்துவதாக உள்ளது.
- வரகு அரிசியானது சர்க்கரை நோயாளிகளுக்கு டாக்டர்களால் பரிந்துரைக்கப்படுகின்றது, அதாவது இது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைக்கச் செய்கின்றது.
- மூட்டுவலிப் பிரச்சினைகள், மூட்டு வீக்கம், எலும்புகள் வீக்கம் போன்றவற்றிற்கு சிறந்த தீர்வாகவும் இருக்கின்றது.
- மேலும் கண்புரை நோய்கள், கண் வீக்கம் என்ற கண்களில் ஏற்படும் பிரச்சினைகளுக்குத் தீர்வாகவும் இருக்கின்றது,
- மேலும் இது உடல் சூட்டினைக் குறைத்து உடலைக் குளிர்ச்சியாக வைக்க உதவுகின்றது.
- நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள், கல்லீரல் அலற்சி, கல்லீரல் செயலினை மேம்படுத்துதல், நிணநீர் சுரப்பிகளை சீராக்கவும் உதவுகிறது.
- பெண்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளான மாதவிடாய்க் கோளாறுகளுக்கு சிறந்த தீர்வாகவும் உள்ளது.
இந்த செய்தியையும் படிங்க…
CORONA-லிருந்து குணமடைந்தோர் ஒரு டோஸ் தடுப்பூசி போட்டால் போதுமா?