CORONA :24 மணி நேரத்தில் குணமாகலாம்- ஐதராபாத் ஆராய்ச்சியாளர்கள்..!! - Tamil Crowd (Health Care)

CORONA :24 மணி நேரத்தில் குணமாகலாம்- ஐதராபாத் ஆராய்ச்சியாளர்கள்..!!

 CORONA :24 மணி நேரத்தில் குணமாகலாம்- ஐதராபாத் ஆராய்ச்சியாளர்கள்..!!

பல மருந்துகளின் கூட்டுக் கலவையை செலுத்திய 24 மணி நேரத்தில், CORONA  நோயாளிகளிடம் இருந்த தொற்று அறிகுறிகள் முழுமையாக நீங்கியுள்ளதாக, தெலுங்கானா மாநிலம் ஐதராபாதைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கூட்டுக் கலவை ஐதராபாதில் உள்ள, ஆசிய இரைப்பை குடல் ஆய்வு மையத்தில், CORONA வுக்கான மருந்துகள் குறித்த ஆய்வு நடந்து வருகிறது.இது குறித்து மையத்தின் தலைவர், டாக்டர் நாகேஸ்வர் ரெட்டி கூறியுள்ளதாவது: அமெரிக்க அதிபராக இருந்த டொனால்டு டிரம்புக்கு, CORONA தொற்று ஏற்பட்டது. அப்போது, நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் பல மருந்துகளின் கூட்டுக் கலவை அவருக்கு செலுத்தப்பட்டது. 

இந்த செய்தியையும் படிங்க…

மூட்டு வீக்கம், எலும்புகள் வீக்கம்  சிறந்த தீர்வு -வரகு அரிசி..!! 

அதன்பின், இது தொடர்பான ஆராய்ச்சிகள் தீவிரமடைந்தன. பிரிட்டன், பிரேசில், தென் ஆப்ரிக்காவில் முதலில் தென்பட்ட உருமாறிய CORONA வைரசுக்கு எதிராக, இந்த கூட்டு மருந்து சிறப்பாக செயல்படுகிறது. இந்தியாவில் முதலில் தென்பட்ட, ‘டெல்டா’ வகை வைரசுக்கு எதிராக இதுவரை ஆய்வு நடத்தப்படவில்லை. 

சோதனை எங்கள் மையத்தில், CORONA நோயாளிக்கு இந்த பரிசோதனை செய்யப்பட்டது. வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட, 3 – 7 நாட்களுக்குள், இந்த மருந்தை ஒருமுறை அளித்தால் போதும்.நாங்கள் பரிசோதித்த, 40 பேருக்கும், 24 மணி நேரத்துக்குள் நோய் அறிகுறிகள் முழுமையாக மறைந்துள்ளன; இது நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. இறுதிகட்ட சோதனைக்கு பின், இந்த புதிய கூட்டு மருந்தை பயன்படுத்த தேவையான ஒப்புதல் பெறப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே பாதிப்பு ஏற்பட்டு குணமடைந்தவர்களுக்கு, புதிதாக வேறு பாதிப்பு ஏற்படுவது அதிகரித்து வருகிறது. கறுப்பு பூஞ்சை  BLOCK FUNGI உட்பட பல புதிய பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன.CORONA பாதிப்பு ஏற்பட்டோருக்கு, கண் பார்வை பிரச்னை ஏற்படுமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. 

இந்த செய்தியையும் படிங்க…

நடைப்பயிற்சி(Walking): ஏற்படும் ஏராளமான நன்மைகள் !!  

‘கொரோனாவால், கண்ணுக்கு பெரிய அளவில் எந்த பாதிப்பும் இருக்காது. ஆனால், ஏற்கனவே சில கண் பிரச்னை உள்ளவர்களுக்கு பாதிப்பு ஏற்படலாம். சரியான நேரத்தில் சிகிச்சை அளித்தால், குணமடைந்துவிடலாம்’ என, டாக்டர்கள் கூறியுள்ளனர்.

Leave a Comment