மின் கட்டணம் செலுத்தவில்லையா..?? JUNE 15 அவகாசம் முடிகிறது..!! - Tamil Crowd (Health Care)

மின் கட்டணம் செலுத்தவில்லையா..?? JUNE 15 அவகாசம் முடிகிறது..!!

 மின் கட்டணம் செலுத்தவில்லையா..??  JUNE 15 அவகாசம் முடிகிறது..!!

LOCKDOWN காரணமாக மின் கட்டணம் செலுத்துவதற்கு வழங்கப்பட்ட அவகாசம் நாளையுடன் (15.06.21) நிறைவடைகிறது.

இந்த செய்தியையும் படிங்க…

தமிழகத்தில் Work From Home பணியாளர்கள் கவனத்திற்கு..!! 

பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டதால் நுகா்வோர் படும் கஷ்டத்தை கருத்தில் கொண்டு மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் வழங்கப்பட்டது.

தமிழகம் முழுவதும் தாழ்வழுத்த நுகா்வோர் மின்கட்டணம் செலுத்துவதற்கான கடைசி நாள் MAY 10 முதல் JUNE 14ஆம் தேதி வரை இருக்குமாயின், அத்தொகையை JUNE  15ஆம் தேதி வரை செலுத்த காலநீட்டிப்பு வழங்கப்பட்டது.

இதே போல் , APRIL மாத மின்கட்டணம் செலுத்தாத உயா்மின்னழுத்த மின் இணைப்புகளுக்கு தாமதக் கட்டணத்துடனும் , சிறு மற்றும் குறு தொழிற்சாலைகள் மற்றும் தாழ்வழுத்த மின்நுகா்வோர்களுக்கான கூடுதல் வைப்புத் தொகையையும் செலுத்த JUNE 15- ஆம் தேதி வரை காலநீட்டிப்பு வழங்கப்பட்டது.

இந்த செய்தியையும் படிங்க…

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையினருக்கு தமிழக அரசு ஊக்கத்தொகை:முதல்வருக்கு சங்கத்தினர் கோரிக்கை..!!

இவ்வாறு வழங்கப்பட்ட அவகாசம் , நாளையுடன் ( 15.06.21) நிறைவடைகிறது . இந்நிலையில் தளா்வு அளிக்கப்பட்டு சில நாள்கள் மட்டுமே ஆன நிலையில் , கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என்று நுகா்வோர் எதிர்பார்க்கின்றனர்.

Leave a Comment