மாவட்ட ஆட்சியர்களுடன்- நாளை மு.க. ஸ்டாலின் மீண்டும் ஆலோசனை..!! - Tamil Crowd (Health Care)

மாவட்ட ஆட்சியர்களுடன்- நாளை மு.க. ஸ்டாலின் மீண்டும் ஆலோசனை..!!

மாவட்ட ஆட்சியர்களுடன்- நாளை மு.க. ஸ்டாலின் மீண்டும் ஆலோசனை..!!

தமிழகத்தில் Corona பரவலைக் கட்டுப்படுத்த பொதுமுடக்கம்(Lockdown) நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், மாவட்ட ஆட்சியர்களுடன் நாளை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்கிறார்.

இந்த செய்தியையும் படிங்க...

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையினருக்கு தமிழக அரசு ஊக்கத்தொகை:முதல்வருக்கு சங்கத்தினர் கோரிக்கை..!!

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் அடுத்தடுத்து IAS அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். நேற்று ஒரே நாளில்  மாவட்ட ஆட்சியர்கள் அதிரடியாக மாற்றப்பட்டனர். அதேபோல் பல மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்களை நியமித்து அரசு உத்தரவிட்டு வருகிறது.

இதனிடையே, தமிழகத்தில் தளர்வுகளுடன் FULL LOCKDOWN இன்று முதல் ஒரு வாரத்துக்கு மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், CORONA தடுப்புப் பணிகள் மற்றும் மாநில வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலகத்தில் இருந்தவாறு காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை நடத்த உள்ளார். நாளை காலை 11 மணிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார்.

மாநிலத்தில் பொதுப் போக்குவரத்து இன்னமும் தொடங்கப்படாத நிலையில், பொதுப் போக்குவரத்தைத் தொடங்குவதற்கான சாத்தியங்கள் இருக்கிறதா.? என்பது குறித்தும், corona  நிலவரங்கள் குறித்தும் மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசிக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது. ஆட்சியர்களுடனான ஆலோசனைக்கு பிறகு ஒருசில தளர்வுகள் அளிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

இந்த செய்தியையும் படிங்க…

“முழு ஊரடங்கிற்கு (FULL LOCKDOWN) முற்றுப்புள்ளி வைக்கும் வகையில்- மக்கள் நடந்து கொள்ள வேண்டும்”:முதலமைச்சர்

Leave a Comment