27 மாவட்டங்களில் சுழற்சி முறையில் ஆசிரியர்கள் பள்ளிக்கு வர -பள்ளிக்கல்வித்துறை உத்தரவு..!! - Tamil Crowd (Health Care)

27 மாவட்டங்களில் சுழற்சி முறையில் ஆசிரியர்கள் பள்ளிக்கு வர -பள்ளிக்கல்வித்துறை உத்தரவு..!!

  27 மாவட்டங்களில் சுழற்சி முறையில் ஆசிரியர்கள் பள்ளிக்கு வர -பள்ளிக்கல்வித்துறை உத்தரவு..!!

தமிழகத்தில் PLUS ONE  வகுப்புக்கான மாணவர் சேர்க்கை JULY 14 தொடங்கியுள்ளது. 9th  வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் PLUS ONE வகுப்புக்கான சேர்க்கை நடைபெறுகிறது. இதற்கிடையில், பள்ளிகளில் மாணவர் சேர்க்கை உட்பட பல்வேறு பணிகள் நடைபெறவுள்ளதால், ஆசிரியர்கள் பள்ளிக்கு வருவதற்கு கல்வித்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

இந்த செய்தியையும் படிங்க…

உயர் கல்வி மாணவர்கள் சேர்க்கை-  இந்த வாரத்தில் முடிவு தெரியும்: அமைச்சர் பேட்டி..!! 

கொரோனா தொற்று (Coronavirus) பரவல் காரணமாக விதிக்கப்பட்ட ஊரடங்கால், கடந்த கல்வி ஆண்டு முழுவதும் ONLINE, KALVI TE WhatsApp, ஆகியவற்றில் வகுப்புகள் நடத்தப்பட்டன. தொற்றின் வீரியம் குறையாததால், 10th, plus two வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. 

PLUS TWO மாணவர்களுக்கான மதிப்பெண்கள் எந்த அடிப்படையில் அளிக்கப்படும் என இன்னும் சில தினங்களில் தெரிய வரும்.10th  மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 10th  சான்றிதழிலும், மதிப்பெண்கள் எதுவும் இருக்காது என்றும் தேர்ச்சி பெற்றதாக மட்டுமே இருக்கும் என்றும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.

இன்று முதல் தமிழகத்தில் மேலும் சில தளர்வுகளுடன் ஊரடங்கு (Lockdown) நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில், மாணவர் சேர்க்கை தொடர்பான பணிகளுக்கு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், பள்ளிகளில் மாணவர் சேர்க்கை உட்பட பல்வேறு பணிகள் நடைபெற இருப்பதால், ஆசிரியர்கள் பள்ளிக்கு வர கல்வித்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

தொற்று கட்டுக்குள் இருக்கும் 27 மாவட்டங்களில் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுடன், பிற ஆசிரியர்களும் சுழற்சி முறையில் பள்ளிக்கு வந்து பணிகளை மெற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்ச்சி விவரங்களை கல்வி மேலாண்மை தாக்கல் முறைமை இணையத்தில் வெளியிடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. corona  தொற்று அதிகமாக உள்ள 11 மாவட்டங்களில், தொற்று குறைந்தவுடன் மாணவர் சேர்க்கை நடைபெறும் என கல்வித்துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியையும் படிங்க…

தமிழகத்தில் Work From Home பணியாளர்கள் கவனத்திற்கு..!! 

முன்னதாக, July 14 காலை செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் (Anbil Mahesh), corona தொற்று பரவல் அதிகமாக உள்ள 11 மாவட்டங்களில் plus one மாணவர் சேர்க்கை இப்போது தொடங்கவில்லை என்று கூறினார்.10th  மதிப்பெண் சான்றிழதழில் மதிப்பெண் இருக்காது, மாணவர் All Pass என்று மட்டுமே இருக்கும் என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார்.

Leave a Comment