எதிர்க்கட்சி துணைத் தலைவராக OPS, கொறடாவாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தேர்வு..!! - Tamil Crowd (Health Care)

எதிர்க்கட்சி துணைத் தலைவராக OPS, கொறடாவாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தேர்வு..!!

 எதிர்க்கட்சி துணைத் தலைவராக OPS, கொறடாவாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தேர்வு..!!

தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவராக OPS தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில்  சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் JUNE 14 நடைபெற்றது. AIADMK ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் மதியம் 12 மணிக்கு கூட்டம் தொடங்கியது. இந்த கூட்டத்தின் முடிவில் மூத்த நிர்வாகிகளை வைத்து மேலும் 20 நிமிடங்களுக்கு கூட்டம் நீட்டிக்கப்பட்டது.

இந்த செய்தியையும் படிங்க…

தமிழகத்தில் Work From Home பணியாளர்கள் கவனத்திற்கு..!! 

கூட்டம் முடிந்தபிறகு நீண்ட நாட்களாக எழுப்பப்பட்டு வந்த எதிர்க்கட்சி துணைத்தலைவர் மற்றும் கொறடா குறித்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக அதிமுக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ஏற்கெனவே எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், எதிர்க்கட்சி துணைத்தலைவராக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதேபோல் அதிமுக சட்டமன்ற கொறடாவாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

துணை கொறடாவாக அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினர் ரவி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதிமுக சட்டமன்ற குழு பொருளாளராக கடம்பூர் ராஜுவும், குழு செயலாளராக முன்னாள் அமைச்சர் கே.சி அன்பழகனும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

Leave a Comment