நரம்பு மண்டல செல்களை பாதிக்கும் Cancer Virus: ஆய்வில் தகவல்..!!
Cancer :உண்டாக்கும் Epstein-Barr Virus (EBV) மத்திய நரம்பு மண்டலத்தில் உள்ள கிலியல் அல்லது நரம்பணு சாரா செல்களை பாதித்து, பாஸ்போ-இனோஸிடோல்ஸ் போன்ற மூலக்கூறுகளை மாற்றியமைக்கிறது என்று Indian Researchers சமீபத்தில் கண்டறிந்துள்ளனர்.
இந்த செய்தியையும் படிங்க…
அல்சைமர், பார்க்கின்சன் மற்றும் மல்ட்டிபிள் ஸ்க்லரோசிஸ் போன்ற நரம்பியல் குறைபாடுகளால் அவதியுறும் நோயாளிகளின் மூளை திசுவில் இந்த Virus கண்டறியப்பட்டுள்ளதால், நரம்பு மண்டலத்தை பாதிக்கும் நோயியல்களில் இந்த வகை வைரசின் பங்கை புரிந்துகொள்ள இக்கண்டுபிடிப்பு வழிவகுக்கலாம்.
மூளை செல்களில் எப்ஸ்டீன்-பார் வைரசின் பாதிப்பு முறையை கண்டறிந்துள்ள டாக்டர் ஜா மற்றும் டாக்டர் குமாரின் குழுவினர், மூளையில் உள்ள கிலியல் செல்களை பாதிக்கும் திறனும் இந்த வைரசுக்கு உண்டு என்று கண்டுபிடித்துள்ளனர்.
வெவ்வேறு கிலியல் செல்களில் வெவ்வேறு முறைகளில் பாதிப்பு வளர்வதை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை ஆதரவு பெற்ற ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்த செய்தியையும் படிங்க…
CORONA :24 மணி நேரத்தில் குணமாகலாம்- ஐதராபாத் ஆராய்ச்சியாளர்கள்..!!
“தன்னை நிறுவிக்கொள்வதற்கும், மூளையில் உள்ள கிலியல் செல்களில் பரவுவதற்கும் பல்வேறு கால அளவுகளை இந்த வகை வைரஸ் எடுத்துக் கொள்கிறது,” என்று டாக்டர் ஜா கூறினார். மேலும், வைரஸ் பாதிப்பின் ஒவ்வொரு நிலையிலும் உள்ள உயிரிமூலக்கூறுகளை கண்டறிவதற்கு முயன்ற ஆராய்ச்சியாளர்கள் குழு, பல்வேறு நரம்பியல் நிலைகளோடு அவற்றை தொடர்பு படுத்தவும் முயற்சித்துள்ளது.