2-ஆம் தவணையாக 2000 ரூபாய் நிவாரண தொகை: பொதுமக்கள் நலனுக்காக வழங்குகிறோம்..!!
குடும்ப அட்டைதாரர்களுக்கு 2-ஆம் தவணையாக 2000 ரூபாய் நிவாரண தொகையை நியாயவிலை கடைகளில் வழங்கி வருகின்றனர்.
இந்தச் செய்தியையும் படிங்க…
பள்ளிகள் இப்போதைக்கு திறக்கப்படாது: அமைச்சர் ..!!
தர்மபுரி மாவட்டத்தில் வசிக்கும் 4 1/2 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு 14 வகையான அத்தியாவசிய பொருட்கள் மற்றும் 2-ஆம் நிவாரண தொகை 2,000 ரூபாயையும் இன்றுமுதல் வழங்கப்படுகின்றன. இந்நிலையில் CORONA தொற்று பரவல் காரணத்தால் பொதுமக்களுக்கு அதிக சிரமம் ஏற்படுவதால் அதை குறைக்கும் வண்ணத்தில் முதலமைச்சர் அறிவித்த படி குடும்ப அட்டைதாரர்களுக்கு 2-ஆம் தவணையாக 2000 ரூபாய் நிவாரணத் தொகையை நியாயவிலை கடைகளில் வினியோகம் செய்து வருகின்றனர். இதனால் அந்தந்த பகுதியில் அமைந்திருக்கும் நியாயவிலை கடைகளில் டோக்கன்களில் குறிப்பிடப்பட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
இதனையடுத்து நியாயவிலைக் கடைகள் மூலமாக மாவட்டத்தில் வசிக்கும் 4, 46, 788 குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழக அரசால் சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு விடுபடுதல் இன்றி 14 வகையான பொருட்கள் அடங்கிய தொகுப்பு மற்றும் சிறப்பு நிவாரண தொகையின் இரண்டாம் தவணையாக 2000 ரூபாயை குடும்ப அட்டைகளின் எண்ணிக்கை அடிப்படையாக நாள் ஒன்றுக்கு 75 முதல் 100 குடும்பங்கள் வரை நியாய விலை கடைகளில் வழங்கி வருகிறது.
இதனைத்தொடர்ந்து CORONA தொற்றில் இருந்து பாதுகாத்துக்கொள்ள நியாயவிலை கடைக்கு வரும் பொதுமக்கள் ஒரு மீட்டர் சமூக இடைவெளியுடன் மற்றும் முக கவசம் அணிந்து நிவாரண தொகையை பெற்றுக் கொள்ள வேண்டும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இந்தச் செய்தியையும் படிங்க…
சிறார் எழுத்தாளர்கள் – கலைஞர்கள் சங்கம்:தமிழகத்தில் உதயமானது..!!
மேலும் நிவாரண தொகையை வழங்குவதில் குறித்து ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் பொதுமக்கள் தாலுகா வாரியாக உள்ள அலுவலர்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி கூறியுள்ளார்.