புதிய DELTA PLUS வகை : corona கண்டுபிடிப்பு..!!
மக்களை மிரட்டும் வகையில் புதிதாக corona virus உருவெடுத்துள்ளது. தற்போது இந்த புதிய corona மக்களிடைய குழப்பத்தை ஏற்படுத்துகிறது. அதிகமாக பரவும் தன்மையுள்ள DELTA வகை சார்ந்த சார்ஸ்-கொரோனா வைரஸ் 2 மேலும் உருமாறி, ‘டெல்டா பிளஸ்’ ஆக மாறியுள்ளது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தச் செய்தியையும் படிங்க…
மக்களின் நலன் கருதி CORONA கட்டுப்பாடுகளை தொடர வேண்டும்: உயர் நீதிமன்றம்..!!
இந்த கொடிய வகை வைரஸ் (Delta Plus) இந்தியாவில் தற்போது குறைவாகவே காணப்படுவதால் இது சற்று ஆறுதல் அளிக்கும் வகையில் உள்ளது மேலும் இது தொடர்பாக உடனடி கவலைக்கு அவசியம் இல்லை என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். முதன் முதலில் இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட, 2வது அலைக்கு முக்கிய காரணமான DELTA வகை கொரோனா வைரஸ்தான் ( Coronavirus) மேலும் உருமாறி புதிய டெல்டா பிளஸ் வகையாக தோன்றியுள்ளது.
இந்த புதிய மாற்றம், சார்ஸ்-கொரோனா வைரஸ் 2-ன் கூர்முனை புரதத்தில் ஏற்பட்டுள்ளதாகவும், அது மனித செல்களில் நுழைந்து பாதிப்பை ஏற்படுத்தகக்கூடும் என்று டெல்லியில் உள்ள மரபியல் மற்றும் ஒருங்கிணை உயிரியல் நிறுவன விஞ்ஞானி வினோத் ஸ்காரியா கூறுகிறார்.
இந்தச் செய்தியையும் படிங்க…
CORONA : தடுப்பூசி கட்டாயம் தேவையா..??தடுப்பூசியின் பயன் தான் என்ன?
தற்போது புதிதாக மாற்றம் அடைந்துள்ளCORONA வகை குறித்து அதிகம் கவலைப்பட தேவையில்லை. ஆனால் இந்த வைரஸை தொடந்து கண்காணித்து வருவது அவசியம் என்பதே விஞ்ஞானிகள், மருத்துவ நிபுணர்களின் ஒட்டுமொத்த கருத்தாக உள்ளது.