தமிழகத்தில் 15 IAS அதிகாரிகள் பணியிட மாற்றம்: தமிழக அரசு உத்தரவு..!! - Tamil Crowd (Health Care)

தமிழகத்தில் 15 IAS அதிகாரிகள் பணியிட மாற்றம்: தமிழக அரசு உத்தரவு..!!

 தமிழகத்தில் 15 IAS அதிகாரிகள் பணியிட மாற்றம்: தமிழக அரசு உத்தரவு..!!

தமிழகத்தில் 15 IAS அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 3 IAS அதிகாரிகளுக்குக் கூடுதல் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, தமிழக அரசின் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு  (ஜூன் 16) வெளியிட்ட உத்தரவு:

1. விருதுநகர் ஆட்சியராகச் செயல்பட்டு மாற்றப்பட்டிருந்த கண்ணன், இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

2. காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராகச் செயல்பட்டு மாற்றப்பட்டிருந்த மகேஸ்வரி ரவிகுமார், வேளாண் மற்றும் உழவர் நலத்துறையின் இணைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

3. சென்னை மாநகராட்சியின் இணை ஆணையர் (கல்வி) செயல்பட்டு மாற்றப்பட்டிருந்த ஷங்கர் லால் குமாவத், வணிகவரித்துறை (அதிக வரி செலுத்துவோர் பிரிவு) இணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

4. பொது (சட்டம் மற்றும் ஒழுங்கு) துறையின் துணைச் செயலாளர் அம்ரித் மாற்றப்பட்டு, நகராட்சி நிர்வாகத் துறையின் இணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

5. நகராட்சி நிர்வாகத் துறையின் இணை ஆணையர் கலைச்செல்வி மோகன் மாற்றப்பட்டு, கணக்கெடுப்பு மற்றும் தீர்வுத் துறையின் கூடுதல் இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

6. நாகர்கோவில் மாவட்ட கூடுதல் இயக்குநர் (வளர்ச்சி)/ மாவட்ட ஊரக வளர்ச்சி மையத் திட்ட அலுவலர் ஐ.எஸ்.மெர்சி ரம்யா மாற்றப்பட்டு, வணிகவரித்துறையின் இணை ஆணையராக (கோயம்புத்தூர்) நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

7. வேளாண் மற்றும் உழவர் நலத்துறையின் செயலாளர் நிஷாந்த் கிருஷ்ணா மாற்றப்பட்டு, ஓசூர் உதவி ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

8. சென்னை மாவட்ட ஆட்சியராகச் செயல்பட்டு மாற்றப்பட்டிருந்த சீத்தாலட்சுமி, வருவாய் நிர்வாகம், பேரிடர் மேலாண்மைத் துறை இணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

9. கூட்டுறவுத்துறை, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை இணைச் செயலாளர் வளர்மதி மாற்றப்பட்டு, சமூக பாதுகாப்புத்துறை இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

10. வருவாய் நிர்வாகம், பேரிடர் மேலாண்மைத் துறை இணை ஆணையர் எம்.லஷ்மி மாற்றப்பட்டு, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் இணைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

11. தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் இணை மேலாண் இயக்குநர் மற்றும் திட்ட இயக்குநர் கோபால சுந்தரராஜ் மாற்றப்பட்டு, தென்காசி மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

12. மகளிர் மேம்பாட்டு வளர்ச்சிக் கழகத்தின் நிர்வாக இயக்குநர் சந்திரகலா மாற்றப்பட்டு, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

13. இ-சேவை பிரிவு இணை இயக்குநர் கமல் கிஷோர் மாற்றப்பட்டு, தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம் மேலாண் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

14. சென்னை மாநகராட்சி வட்டாரத் துணை ஆணையர் (வடக்கு) பதவி வகித்த ஆகாஷ் மாற்றப்பட்டு, சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரிய நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

15. மலைப்பிரதேச வளர்ச்சித்துறை (உதகமண்டலம்) திட்ட இயக்குநர் பதவி வகிக்கும் சரயு மாற்றப்பட்டு, தமிழ்நாடு வழிகாட்டுதல் அமைப்பு மேலாண் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, IAS அதிகாரிகள் மூவருக்குக் கூடுதல் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

1. தொழில் முனைவோர் வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவன இயக்குநர் பதவி வகிக்கும் விபு நாயருக்கு கூடுதலாக சிறப்பு செயலாக்கத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

2. நீர்ப்பாசன விவசாய நவீனமயமாக்கல் மற்றும் நீர்நிலைகள் மறுசீரமைப்பு மற்றும் மேலாண்மை திட்ட இயக்குநர் பதவி வகிக்கும் மங்கத்ராம் ஷர்மாவுக்கு கூடுதலாக சமூக சீரமைப்புத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

3. புதிய திருப்பூர் பகுதி வளர்ச்சிக் கழக மேலாண் இயக்குநராகப் பதவி வகிக்கும் சந்திரகாந்த் பி.காம்பிளேவிற்கு கூடுதலாக நிலச் சீர்திருத்தத்துறை ஆணையர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

Leave a Comment