வெள்ளை சர்க்கரை & பிரவுன் சர்க்கரை (BROWN SUGAR)எது நல்லது..??
வெள்ளை சர்க்கரையை விட, சுத்திகரிக்காத, பட்டை தீட்டப்படாத BROWN SUGARஎனப்படும் நாட்டு சர்க்கரை மிகவும் நல்லது என்று பலரும் கருதிக் கொண்டிருக்கிறார்கள். சர்க்கரை, பிரவுன் சர்க்கரை இரண்டுமே கரும்பு சாற்றில் இருந்து தயாரிக்கப்படுவதுதான். கரும்புச் சாற்றைக் கொதிக்க வைத்து, மூன்றில் ஒரு பங்காக காய வைத்து பிறகு குளிர்விக்கும் போது பழுப்பு நிறத்தில் வெல்லம் பாகு கிடைக்கிறது. இந்த பாகை சுத்தப்படுத்தி சர்க்கரையாக மாற்றுகின்றனர். இந்த செயல்பாட்டில் மிக அதிக அளவில் ரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றன.
இந்த செய்தியும் படிங்க…
“DO NOT SKIP YOUR BREAKFAST – காலை உணவை தவிர்க்காதீர்கள்”..!!
அதே நேரத்தில் CALORIE அளவைப் பொருத்தவரை இரண்டுக்கும் பெரிய அளவில் வித்தியாசம் இல்லை. வெள்ளை சர்க்கரை சுத்தமான CARBOHYDRATE . இது உடலில் கலோரியை அதிகரிக்க செய்து கொழுப்பாக மாற்றப்பட்டுச் சேகரிக்கப்படுகிறது.
ஒரு டீஸ்பூன் சர்க்கரையில் (தோராயமாக 4 கிராம்) 16 கலோரி இருக்கும். அதுவே பிரவுன் சர்க்கரையில் 14-15 கலோரி என்ற அளவில் இருக்கும். எனவே, வெள்ளை சர்க்கரையை சேர்ப்பதைக் காட்டிலும் பிரவுன் சர்க்கரை சேர்ப்பதால் கலோரி குறைவு என்று கருதிவிட வேண்டாம்.
பழுப்பு சர்க்கரையை விட நாட்டு சர்க்கரை மிகவும் நல்லது. தென்னை மற்றும் பனை மரத்திலிருந்து இறக்கப்படும் பதநீரைக் கொண்டு இந்த சர்க்கரை தயாரிக்கப்படுகிறது. இந்த செயல்முறையில் ரசாயனங்கள் சேர்க்கப்படுவது இல்லை என்பதால் ஆரோக்கியமான சர்க்கரையாக இது பார்க்கப்படுகிறது. இதன் கிளைசெமிக் இன்டெக்ஸ் மிகவும் குறைவு. இதனால் ரத்தத்தில் உடனடியாக சர்க்கரை அளவை இது அதிகரிக்கச் செய்யாது.
இந்த செய்தியும் படிங்க…
வீட்டை விட்டு வெளியே செல்வோர் தவறாமல் பின்பற்ற வேண்டிய விஷயங்கள்..!!
நாட்டு சர்க்கரையில் POTASSIUM, PHOSPHORUS, ZINC, IRON, COPPER ஆகிய ஊட்டச்சத்துக்கள் அதிக அளவில் உள்ளன. INSULIN RESISTANCE பிரச்னை மற்றும் சர்க்கரை நோய்க்கான வாய்ப்பை இது குறைக்கும்.