முட்டையுடன் சேர்த்து சாப்பிடக் கூடாத -சில உணவுகள் என்னென்ன..??
புரதம் நிறைந்த முட்டையை நாம் சில உணவுகளுடன் சேர்த்து சாப்பிடும் பொழுது அது நம்முடைய உடலுக்கு சில கெடுதலையும் பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தும். அப்படி நாம் முட்டையுடன் சாப்பிட கூடாத உணவுகள் என்னென்ன என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.
இந்த செய்தியும் படிங்க…
உடல் வெப்பத்தைத் தணிக்கும் -உணவுகள்..!!
பலரும் காலை நேரத்தில் சோயா பாலையும், முட்டையையும் சேர்த்து சாப்பிடும் வழக்கம் கொண்டிருக்கிறார்கள். முட்டைகளில் உள்ள புரதம் சோயாபீன் பாலில் உள்ள டிரிப்சினுடன் இணையும் என்பது அவர்களுக்கு தெரியாமல் இப்படி உண்கிறார்கள். இது நமது உடல் புரோட்டின் உறிஞ்சுவதை தடுக்கிறது. கூடவே உடல்சிதைவு பிரச்சனையை ஏற்படுத்தும்.
முட்டையுடன் சேர்த்தோ அல்லது முட்டை சாப்பிட்டபின் வாத்து இறைச்சி சாப்பிடக்கூடாது. ஏனெனில் வாத்து இறைச்சியில் இனிப்பு தன்மையும் குளிர்ச்சியை உண்டாக்கும் காரணிகளும் அதிகம் உள்ளது. முட்டையிலும் அதிக அளவு புரதமும் குளிர்ச்சியை உண்டாக்கும் காரணிகளும் உள்ளது.
ஒரே குணமுடைய இந்த இரண்டு பொருள்களும் ஒன்றிணையும் போது அது செரிமான அமைப்பில் பாதிப்பை ஏற்படுத்தும் மேலும் வயிற்றுப்போக்கை உண்டாக்கும். முயல் இறைச்சியிலும் இந்த காரணிகள் இருப்பதால் முட்டையும் முயல் இறைச்சியும் சாப்பிட்டாலும் இதே பிரச்சனைகள் ஏற்படும்.
நம்மில் பலரும் தேநீர் உடன் முட்டை சாப்பிடும் பழக்கத்தை கொண்டுள்ளோம். இப்படி சாப்பிடுவது நம் ஆரோக்கியத்தை சீர்கெடுக்கும் என பலருக்கும் தெரிவதில்லை.
இந்த செய்தியும் படிங்க…
உடல் எடையை குறைக்க – எளிய வழிமுறைகள் !!