மனச்சோர்வா..?? இந்த உணவுகளைச் சாப்பிடுங்கள்..!! - Tamil Crowd (Health Care)

மனச்சோர்வா..?? இந்த உணவுகளைச் சாப்பிடுங்கள்..!!

 மனச்சோர்வா..?? இந்த உணவுகளைச் சாப்பிடுங்கள்..!!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் எதிர்கொள்ளும் ஒரு பிரச்னையாக உருவெடுத்துள்ளது மனச்சோர்வு.

நவீன கால வாழ்க்கை முறையின் பல நோய்களுக்கு முக்கிய காரணியாக இருப்பது இதுவே. மனநலம் கெடுவதால் உடல்நலமும் கெட்டுப்போகிறது.

இந்த செய்தியும் படிங்க…

 முடி உதிராமல் இருக்க  – சில வழிமுறைகள் !! 

மனச்சோர்வை போக்குவதற்கு ஆலோசனைகள், மருத்துவ சிகிச்சை முறைகள் பெருகி வருகின்றன. எனினும் உணவுகளின் மூலமாக மனச்சோர்வை போக்கலாம்.

சரியான உணவுகளை சாப்பிடும் பட்சத்தில், மனச்சோர்வில் இருந்து விடுபடலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

மனச்சோர்வின்போது எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்:

அக்ரூட் பருப்புகள்:WALNUT:

அக்ரூட் பருப்புகளை அளவோடு சாப்பிடும்போது, ​​அவை இதயத்திற்கு ஆரோக்கியமான மோனோசேச்சுரேட்டட் கொழுப்புகள் மற்றும் புரதத்தைத் தருகின்றன. அதேபோன்று அவற்றில் உள்ள OMEGA -3 கொழுப்பு அமிலங்கள் சிறந்த தாவர அடிப்படையிலான ஆதாரங்களில் ஒன்று. இது மூளையின் ஆரோக்கியத்தைப் பராமரிக்க உதவுகிறது.

தானியங்கள்:

மனச்சோர்வை எதிர்க்கும் உணவுகளில் தானியங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இதில் உள்ள FIBRE, CARBOHYDRATE  மனநிலையை விரைவாக மேம்படுத்த உதவுகின்றன. பயறு வகைகள், கொண்டைக்கடலை ஆகியவற்றை உணவில் அடிக்கடி சேர்த்துக்கொள்ளலாம்.

மஞ்சள்:

மிகச்சிறந்த நோய் எதிர்ப்பு மருந்தாக இருக்கும் மஞ்சள், உங்களது மனநிலையை சீராக வைத்துக்கொள்ள உதவும் சிறந்த மருந்து. உணவில் அடிக்கடி பயன்படுத்தப்படும், மஞ்சள் பல சுகாதார நன்மைகளைக் கொண்டுள்ளன. இரவில் தூங்கும்போது பாலில் சிறிதளவு மஞ்சள் சேர்த்து குடிக்கவும்.

கிரீன் டீ:

கிரீன் டீ ஆன்டிஆக்ஸிடன்ட்களின் சிறந்த மூலமாகும். ஆனால், மனச்சோர்வை எதிர்கொள்ளும் திறன் என்று பார்த்தால் கிரீன் டீ-யில் உள்ள தியானைன் என்ற அமினோ அமிலம் உதவுகிறது. தேநீர் இலைகளில் இயற்கையாகவே இருக்கும் ஒரு அமினோ அமிலம் தியானைன். இது மன அழுத்தத்தில் இருந்து விடுபட வைக்கிறது.

குறைந்த கொழுப்புள்ள பால் பொருட்கள்: 

குறைந்த கொழுப்புள்ள பால் பொருட்களான ஸ்கிம் பால், தயிர், குறைந்த கொழுப்புள்ள பன்னீர் மற்றும் பிற பால் பொருட்கள் ஆகியவற்றில் Calcium, Vitamin Cமற்றும் Protein அதிகம். மனச்சோர்வை எதிர்கொள்பவர்கள் இவற்றை உணவாக எடுத்துக்கொள்ளலாம்.

காய்கறிகள், பழங்கள்:

 தினமும் உணவில் ஏதாவது ஒரு காய்கறி அல்லது பழத்தை சேர்த்துக்கொள்ள வேண்டும். பழங்களைப் பொருத்தவரை மாதுளம்பழம் சாப்பிடுவது மனச்சோர்வைத் தடுக்கும். இதயத்திற்கு நல்லது. தினமும் ஆப்பிள் ஒன்று சாப்பிடலாம்.

தவிர்க்க வேண்டியவை:

 பர்கர், பீட்ஸா போன்ற துரித உணவுகள், எண்ணெய்யில் பொறித்த உணவுகள், அதிக ரசாயனம் உள்ள உணவுகளைத் தவிர்க்க வேண்டும். கொழுப்புச்சத்து அதிகமுள்ள உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

Leave a Comment