e-Pan Card 5 நிமிடத்தில் பெறும் எளிய வழிமுறைகள்..!!
INCOME TAX DEPARTMENT தற்போது மக்கள் பயனடையும் வகையில் e-Pan Card எடுப்பதற்கு புதிய வழிவகை செய்துள்ளது. தற்போது அதற்கான எளிய வழிமுறைகள் வெளியாகியுள்ளது.
இந்த செய்தியும் படிங்க…
PF கணக்கில் AADHAAR இணைக்க SEPTEMBER 1-ந் தேதி வரை கால நீட்டிப்பு :மத்திய அரசு உத்தரவு..!!
நாட்டு மக்கள் மத்தியில் பான் கார்டு முக்கிய ஆவணமாக இருந்து வருகிறது. வருமான வரித்துறை பண பரிவர்த்தனை சேவைகளுக்கு Pan Card பயன்முறையை கட்டாயமாக்கி உள்ளது. அந்த வகையில் வங்கி வாடிக்கையாளர்கள் Debit மற்றும் Credit கார்டுகளை பெறுவதற்கு Pan Card முக்கிய ஆவணமாக இருந்து வருகிறது. சில சமயங்களில் மக்கள் Pan Card தேவைப்படும் முக்கிய நேரங்களில் அதை தவற விடுகிறார்கள்.
அதை மீண்டும் திரும்ப பெறுவதில் காலதாமதம் ஏற்படுவதால் மக்கள் சிரமப்பட்டு வந்தனர். தற்போது இந்த நிலையை போக்கும் வகையில் வருமான வரித்துறை புதிய வழிவகை ஒன்றை ஏற்படுத்தியுள்ளது.
அதன்படி மக்கள் இனி 5 நிமிடங்களில் e-Pan Card பெற முடியும். இதற்கு எந்த கட்டணமும் வசூலிக்கப்பட மாட்டாது என்றும் இதனை பெற Aadhaar Card மட்டும் போதும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது e-Pan பெறும் எளிய வழிமுறைகள் வெளியாகியுள்ளது.
e-Pan Card பெறும் எளிய வழிமுறைகள்:
- முதலில் வருமான வரித்துறையின் அதிகாரபூர்வ தளமான https://www.incometax.gov.in/iec/foportal என்ற இணையதளத்தில் லாகின் செய்யவும்.
- பின்பு ‘Instant e-PAN’ என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
- அடுத்ததாக ‘New e-PAN’ என்னும் ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
- இதை தொடர்ந்து உங்கள் பான் எண்ணை பதிவிடவும்.
- பான் எண் மறந்து விட்டால் அதற்கு மாற்றாக ஆதார் எண்ணை பதிவிடவும்.
- விதிமுறைகளை படித்து பார்த்து ‘Accept’ கொடுக்கவும்.
- தற்போது உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு வரும் OTP நம்பரை தளத்தில் பதிவு செய்யவும்.
- விவரங்களை படித்து பார்த்து ‘Confirm’ கொடுக்கவும்.
- இதனை அடுத்து உங்களில் மெயில் ஐடிக்கு இ-பான் கார்டு PDF Format ல் அனுப்பப்படும்.
- இப்போது இ-பான் கார்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.