LOCKDOWN நீட்டிப்பு:11 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் இல்லை..!!
தமிழகத்தில் CORONA தொற்று அதிகமுள்ள 11 மாவட்டங்களில் புதிதாக கூடுதல் தளர்வுகள் எதுவும் அறிவிக்கப்படவில்லை.
தமிழகத்தில் வருகின்ற JUNE 28 ஆம் தேதி காலை 6 மணி வரை புதிய தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த செய்தியும் படிங்க…
“அரசுப்பள்ளிகளில்: ஆங்கில பயிற்சியை மேம்படுத்துங்கள்” – கமல்ஹாசன்..!!
எனினும்,கொரோனா தொற்று அதிகமுள்ள 11 மாவட்டங்களில் புதிதாக கூடுதல் தளர்வுகள் எதுவும் அறிவிக்கப்படவில்லை.மாறாக,ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகள் மட்டும் தொடர்ந்து அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்படாத 11 மாவட்டங்கள்:
கோயம்புத்தூர்,நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் புதிதாக கூடுதல் தளர்வுகள் எதுவும் அறிவிக்கப்படவில்லை.